MEDIA STATEMENT

தாமான் ரியாவில்  ,  இன்று 20 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன, பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் திறக்கப்பட்டது

11 மார்ச் 2025, 3:16 PM
தாமான் ரியாவில்  ,  இன்று 20 வீடுகள் கடுமையாக சேதமடைந்தன, பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குமிடம் திறக்கப்பட்டது

ஷா ஆலம், மார்ச் 11: முன்னதாக இன்று மாலை 4.30 மணியளவில் ஏற்பட்ட புயலால் செகின்சானில் உள்ள தாமான்  ரியாவில் சுமார் 20 வீடுகள் சேதமடைந்தன. பாதிக்கப்பட்டவர்களுக்கு தங்குவதற்கு இடமளிக்க தற்காலிக தங்கும் மையங்களைத் (பிபிஎஸ்) திறக்க தனது குழு பல நிறுவனங்களுடன் தீவிரமாக ஒத்துழைத்து வருவதாக  மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  டத்தோ இங் சுயீ லிம் கூறினார்.

"நான் ஏற்கனவே சபாக் பெர்ணமின் மாவட்ட அதிகாரியையும், சபாக் பெர்ணம் மாவட்ட கவுன்சிலின் விரைவு படை மற்றும் சமூக நலத் துறையையும் உடனடியாக  தாமான்  ரியாவுக்குச் சென்று உதவுமாறு கேட்டுக் கொண்டுள்ளேன்".

"பாதிக்கப்பட்டவர்கள் இன்றிரவு தஞ்சம் அடைவதற்காக  ஸ்ரீ செகிஞ்சான் மண்டபத்தில்  ஒரு தற்காலிக தங்குமிடம் திறப்போம்" என்று அவர் கூறினார், அவர்  செகிஞ்சான்  மாநில சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

செகிஞ்சானில் நடந்த இரண்டாவது சூறாவளி சம்பவம் குறித்து கருத்து தெரிவித்த சுயீ லிம், இந்த சம்பவத்தில் உயிர் இழப்பு எதுவும் ஏற்படவில்லை என்று நன்றி தெரிவித்தார்.

மார்ச் 6 அன்று, பாரிட் 4, சுங்கை பூரோங்கில்  கடுமையான புயல் காரணமாக எட்டு வீடுகள் கடுமையாக பாதிக்கப்பட்டது, இருப்பினும், காலை 7:30 மணிக்கு நடந்த சம்பவத்தில் உயிரிழப்புகள் அல்லது காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.

வீடுகளைத் தவிர, பாரிட் 4 தேசியப் பள்ளியின் கூரை, ஆசிரியர்களின் குடியிருப்புகள், உணவகம் மற்றும் கார் கேரேஜ் ஆகியவையும் சேதமடைந்தன.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.