தாயைக் கொன்ற ஆடவருக்கு மனநலச் சோதனை-  நீதிமன்றம் உத்தரவு

9 மார்ச் 2025, 5:16 AM
தாயைக் கொன்ற ஆடவருக்கு மனநலச் சோதனை-  நீதிமன்றம் உத்தரவு

அலோர் ஸ்டார், மார்ச் 9- அண்மையில் தனது தாயைக் கொன்றதாகக் குற்றம் சாட்டப்பட்ட ஆடவர் ஒருவரை ஒரு மாதத்திற்கு மனநலக் கண்காணிப்பில் வைக்க இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டது.

எந்தவொரு வாக்குமூலமும் பதிவு செய்யப்படுவதற்கு முன்பு குற்றம் சாட்டப்பட்டவர் முதலில் மன பரிசோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என்று அரசு தரப்பு கோரியதைத் தொடர்ந்து  43 வயதான அப்துல்  ரஹ்மான் ஹருண் என்ற அந்த ஆடவருக்கு எதிராக மாஜிஸ்திரேட் நூர் சைஃபா முகமது ஹம்சா இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கடந்த மார்ச் 2 ஆம் தேதி காலை 7.00 மணிக்கும் 8 மணிக்கும் இடையே  இங்கு அருகிலுள்ள முக்கிம் டெர்கா,  கம்போங் போக்-போக்கில் உள்ள ஒரு வீட்டில் 68 வயதான இசா சாலே என்ற மூதாட்டியை கொலை செய்ததாக அவ்வாடவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்ப்டால்  மரணதண்டனை அல்லது 40 ஆண்டுகள் வரையிலான சிறைத்தண்டனை மற்றும் குறைந்தபட்சம் 12 பிரம்படிகள் விதிக்க வகை செய்யும்

தண்டனைச் சட்டத்தின் பிரிவு 302 இன் கீழ் அந்த நபருக்கு எதிராக குற்றம்    சாட்டப்பட்டது.

இன்றைய  விசாரணையின் போது  அந்நபரிடம் எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை. தனக்கு எதிராக குற்றச்சாட்டு வாசிக்கப்பட்டபோது  அதனை  புரிந்துகொண்டதற்கு அடையாளமாக அவர் தலையசைத்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.