MEDIA STATEMENT

தஞ்சோங் காராங்கில் புயலால் பாதிக்கப்பட்ட  வீடுகளை சீரமைக்கும் பணி தொடங்கியது

9 மார்ச் 2025, 1:33 AM
தஞ்சோங் காராங்கில் புயலால் பாதிக்கப்பட்ட  வீடுகளை சீரமைக்கும் பணி தொடங்கியது

ஷா ஆலம், மார்ச் 9-  தஞ்சோங் காராங்,  சுங்கை பூரோங் பாரிட் 4 இல் புயலால் பாதிக்கப்பட்டவர்களின் வீடுகளை பழுதுபார்க்கும்  பணி சிலாங்கூர் மந்திரி புசார் கழகம் அல்லது எம்.பி.ஐ. அறவாரியத்தால்  நியமிக்கப்பட்ட குத்நகையாளரால் தொடங்கப்பட்டுள்ளது.

துப்புரவுப் பணிகள் முற்றுப் பெற்றவுடன் வீடுகளின் கூரையில் தற்காலிக கேன்வஸ் பொருத்தப்படும் என்று அந்த அறவாரியத்தின்   தலைவர் அகமது அஸ்ரி ஜைனல் நோர் தெரிவித்தார்.

சுங்கை பூரோங் சட்டமன்ற சேவை மையத்துடன் இணைந்து எம்.பி.ஐ.  அறவாரியம் நியமித்த  குத்தகையாளர்கள் வீட்டின் கூரையில் தற்காலிக கேன்வாஸை நிறுவும் பணியைத் தொடங்கியுள்ளனர்.

வீடுகளின் பழுதுபார்ப்பு மற்றும் ஒருங்கிணைப்புப் பணிகள் மாநில பேரிடர் மேலாண்மை பிரிவால் நிர்வகிக்கப்படும் என்று அவர்  தனது முகநூல் பதிவின் மூலம் தெரிவித்தார்.

நேற்று முன்தினம் காலை 7.30 மணியளவில் ஏற்பட்ட பலத்த புயல் ஏற்பட்ட சம்பவத்தில்  எட்டு வீடுகள் சேதமடைந்தன. ஆனால் யாருக்கும் காயம்  அல்லது உயிரிழப்பு ஏற்படவில்லை.

வீடுகள் தவிர, பாரிட் 4  தேசியப் பள்ளியின்  கூரை, ஆசிரியர் குடியிருப்பு, கேண்டீன் மற்றும் கார் நிறுத்துமிடம் ஆகியவையும் சேதமடைந்தன.

இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வீடுகள் கடுமையாக சேதமடைந்த அனைத்து குடியிருப்பாளர்களுக்கும் மாநில அரசு 500 வெள்ளி உதவித் தொகையை வழங்கியது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.