கோலாலம்பூர், மார்ச் 8: தேசிய பூப்பந்து தொழில்முறை ஒற்றையர் வீரரான லீ ஜீ ஜியா, பிரான்சின் ஆர்லியன்ஸ் மாஸ்டர்ஸில் மேலும் ஒரு படி முன்னேற வேண்டும் என்ற ஆசை நிறைவேறவில்லை, மலேசிய நேரப்படி இன்று அதிகாலை காலிறுதிப் போட்டியில் அயர்லாந்தைச் சேர்ந்த தரவரிசை படுத்தப்படாத வீரர் நாட் நுயேனிடம் தோல்வியடைந்த பின்னர் அவர் கனவு கலைந்தது
பாலைஸ் விளையாட்டு அரங்கில் நடைபெற்ற போட்டியில், Nguyen போட்டியில் தர வரிசையில் முதலிடத்தில் இருந்த ஜீ ஜியாவை 23-21,21-7 என்ற புள்ளி கணக்கில் தோற்கடிக்க 39 நிமிடங்கள் மட்டுமே தேவைப்பட்டது.
இந்த வெற்றி வழி ஜீ ஜியாவுடனான முந்தைய மூன்று மோதல்களில் தோல்விக் கண்டதை முறியடித்துள்ளார் நுயென். அந்த அயர்லாந்து வீரர் இன்று அரையிறுதியில் உள் நாட்டு பிரதிநிதி அலெக்ஸ் லேனியரை எதிர்கொள்ள உள்ளார்.
கடந்த டிசம்பரில் நடந்த பி. டபிள்யூ. எஃப் உலக சுற்றுப் பயணத்தின் போது ஏற்பட்ட கணுக்கால் காயத்தில் இருந்து மீண்ட பிறகு இந்த சீசனில் ஜீ ஜியாவின் முதல் போட்டி இதுவாகும்.
இதற்கிடையில், தேசிய ஆண்கள் இரட்டையர் அணி, ஆரிஃப் ஜுனைடி-யாப் ராய் கிங், தைவானிய ஜோடியான லீ ஜே ஹுயி-யாங் போ ஹ்சுவானை 21-19,21-18 என்ற செட் கணக்கில் தோற்கடித்து தங்கள் முன்னேற்றத்தைத் தொடர்ந்தார்.
முதல் முறையாக அரையிறுதி போட்டியில் லியாங் வீ கெங்-வாங் சாங்கிற்கு எதிராக கடுமையான சவாலை எதிர்கொள்ள இப்போது தயாராக உள்ளனர்.








