செய்தி; சிவா கோல சிலாங்கூர்
செகிஞ்சாங் மார்ச் 6;- இன்று விடியற்காலை சுமார் 7:00 - மணியளவில் பாரிட் அம்பாட் செகிஞ்சான் பகுதியில் பெய்த கனத்த மழையுடன் வீசிய திடீர் சுழல் காற்றில் சுமார் 10 - வீடுகள் சேதப்பட்டன. அதில் நெடுஞ்சாலையோர மின்சார தூண்களும் பாதிக்கப்பட்டதால் மின்சாரம் துண்டிக்கப் பட்டதாக அறியப்படுகிறது.
இன்றைய சுழல் காற்றில் பாதிக்கப்பட்ட 10 வீடுகளில் 7 இந்தியர்கள் உடையது மற்றும் ,3 -மலாய் குடும்பத்தினருக்கு சொந்தமானது என்றும் சமூக சேவையாளர் ஜி.கே.நடராஜா அவர்கள் தெரிவித்தார்.
நெற்பயிர்கள் சூழ்ந்த சொர்க்க பூமியாக விளங்கும் இந்த செகிஞ்சான் பாரிட் அம்பாட் பகுதியில் இது போன்றதொரு அசம்பாவிதம் நடந்ததில்லை, இது தான் முதல் முறை என்றும் இந்த சுழல் காற்றில் எங்களின் வீட்டு கூரைகள் பறந்தன, அதனால் வீட்டில் இருந்த அனைத்து பொருட்களும் மழை நீரில் நனைந்ததுடன் தண்ணீர் சூழ்ந்து கொண்டதால் பல தளவாடப் பொருட்கள் சேதமடைந்ததாகவும், தாங்கள் ஈடு செய்ய முடியாத இழப்பை எதிர்நோக்குவதாக வும் வேதனையுடன் தங்கள் சோகத்தை வெளியிட்டனர்.
மழைக்காலத்தில் கூரைகள் இல்லாத வீட்டினர் அக்கம் பக்கம் உள்ள வீடுகளில் தற்காலிகமாக அடைக்கலம் பெற்றுள்ள வேளையில் சிலர் வாடகை வீடுகளுக்கு சென்றுள்ளதாகவும் முக்கிய உடனடி உணவு தேவைக்கு அந்த தொகுதி சட்டமன்ற உறுப்பினர், சில நண்பர்கள் ஜ.செ.க இங் சுய் லிம் மற்றும் சிலர் உதவி வருவதாக கூறினர்.
நாங்கள் விவசாயிகள் எங்களிடம் சேமிப்பு என்று பெரிதாக ஏதுமில்லை . எங்கள் வீடுகளை சரி செய்யவும் வாழ்க்கையை மீண்டும் துவக்க மத்திய மற்றும் மாநில அரசாங்கங்களின் உதவியை பெரிதும் எதிர் பார்க்கிறோம் என பாதிக்கப்பட்டவர்கள் கண்ணீர் மல்க கூறினர்.
இதனிடையே இச்சம்பவம் அறிந்து செகிஞ்சான் (DAP) குழுவினர், இந்தியர் கிராமத்து தலைவர்,சுங்கை பாஞ்சாங் தஞ்சோங் காராங் சட்டமன்ற உறுப்பினர் அவ்விடத்திற்கு வருகை புரிந்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீட்டி உள்ளனர்.