ANTARABANGSA

நோன்பு மாதத்தை முன்னிட்டு இந்தோனேசியாவில் சுமார் 300,000 பேர் இரயில் சேவையைப் பயன்டுத்தினர்

3 மார்ச் 2025, 2:32 AM
நோன்பு மாதத்தை முன்னிட்டு இந்தோனேசியாவில் சுமார் 300,000 பேர் இரயில் சேவையைப் பயன்டுத்தினர்

ஜாகர்த்தா, மார்ச். 3 - நோன்பு மாதத்தை முன்னிட்டு இரயில் சேவைக்கான

தேவை அதிகரித்துள்ள நிலையில் கடந்த சில தினங்களாக நீண்ட தூரப்

பயணங்களுக்கு 246,000 பேர் அச்சேவையைப் பயன்படுத்தியுள்ளனர் என்று

இந்தோனேசிய இரயில் சேவை நிறுவனம் கூறியது.

கடந்த பிப்ரவரி 28ஆம் தேதி 125,008 பேரும் மார்ச் 1ஆம் தேதி 69,719

பேரும் மார்ச் 2ஆம் தேதி 51,400 பேரும் இரயில் சேவையைப்

படுத்தியுள்ள வேளையில் டிக்கெட்டுகளின் விற்பனைக்கு ஏற்ப பயணச்

சேவையும் அதிகரிக்கப்படும் என்று அந்நிறுவனம் தெரிவித்தது.

பெரும்பாலான இந்தோனேசியர்கள் நோன்பு மாதத்தின் முதல் நாளை

தங்கள் குடும்பத்தினருடன் வரவேற்க விரும்புவதால் ரமலான் மாதத்தின்

தொடக்கத்தில் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பது வழக்கமான

ஒன்றாகும் என அது தெரிவித்தது.

இந்த பயணிகள் அதிகரிப்பு போக்கு நோன்புப் பெருநாள் வரை தொடர்ந்து

அதிகரிக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. ‘முடிக்‘ எனப்படும் இந்த பெருநாள்

இந்தோனேசியாவின் முக்கியப் பண்டிகைகளில் ஒன்றாக விளங்குகிறது.

2025ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை முன்னிட்டு இதுவரை 13 லட்சத்து

93 ஆயிரத்து 836 டிக்கெட்டுகள் விற்கப்பட்டுள்ளன. இவ்வாண்டு

பெருநாளுக்காக ஒதுக்கப்பட்டுள்ள 34.4 லட்சம் டிக்கெடுகளில் இது 40.47

விழுக்காடாகும்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.