MEDIA STATEMENT

எம். பி. எஸ். ஏ ரமலான் மாதம்  முழுவதும் பார்க்கிங் அபராதங்களை குறைக்கிறது.

2 மார்ச் 2025, 8:14 AM
எம். பி. எஸ். ஏ ரமலான் மாதம்  முழுவதும் பார்க்கிங் அபராதங்களை குறைக்கிறது.

ஷா ஆலம், மார்ச் 2: ஷா ஆலம் மாநகர சபை (MBSA) வளாகங்களுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட குற்றங்களுக்கன  தண்டத்தில் 80 சதவீத தள்ளுபடி வழங்குகிறது மற்றும் பார்க்கிங்  குற்றங்களுக்கு RM10 கட்டணம்  விதிக்கிறது.

இந்த சிறப்பு கழிவு இந்த ரமலான் மாதம் முழுவதும் மட்டுமே மேற்கொள்ளப்படும் என்று எம். பி. எஸ். ஏ பேஸ்புக் வழியாக அறிவித்தது.  எம். பி. எஸ். ஏ விஸ்மா சென்ட்ரல் கவுண்டர், எம். பி. எஸ். ஏ டிரைவ்-த்ரூ கவுண்டர், எம். பி. எஸ். ஏ கிளை அலுவலகங்கள் அல்லது மை. எம். பி. எஸ். ஏ ஆன்லைனில் மூலம் அபராதங்களை சரிபார்த்து செலுத்தலாம்.

ஷா ஆலம் ஆன் வீல் மொபைல் கவுண்டரில் ஒவ்வொரு சனிக்கிழமையும் காலை 11 மணி முதல் மாலை 4 மணி வரை பல்வேறு இடங்களில் பொதுமக்கள் சோதனை செய்து அபராதம் செலுத்தலாம்.

இந்த ஆண்டு ஷா ஆலம் மாநகரின் வெள்ளி விழா ஆண்டுடன் இணைந்து பொது உள்கட்டமைப்பை மேம்படுத்துவதற்காக பல்வேறு திட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

ஷா ஆலம் அக்டோபர் 10, 2000 அன்று ஒரு மாநகரமாக தரம் உயர்த்தப்பட்டது, மேலும் சிலாங்கூரில் அத்தகைய அங்கீகாரத்தைப் பெற்ற முதல்  மாநகரம்  இதுவாகும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.