MEDIA STATEMENT

சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி ரமலானை அனுசரித்து வழிபாடுகளை அதிகரிக்க மக்களை அழைக்கிறார்.

2 மார்ச் 2025, 2:42 AM
சிலாங்கூர் சுல்தான் மற்றும் தெங்கு பெர்மைசூரி ரமலானை அனுசரித்து வழிபாடுகளை அதிகரிக்க மக்களை அழைக்கிறார்.

ஷா ஆலம், மார்ச் 2;- சிலாங்கூர் சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா அல்ஹாஜ் மற்றும் சிலாங்கூர் அரச மேன்மைமிகு தெங்கு பெர்மைஸூரி தெங்கு பெர்மைஸூரி ஹஜா நோராஷிகின் ஆகியோர் சிலாங்கூரில் வசிப்பவர்களுக்கு ரமலான் மாதத்திற்கான வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

பேஸ்புக்கில் சிலாங்கூர் அரச அலுவலகத்தின் அறிக்கையின்படி, சிலாங்கூர் பட்டத்து இளவரசர் தெங்கு அமீர் ஷாவும் முஸ்லிம்களுக்கு தனது வாழ்த்தை தெரிவித்துக்கொண்டார்

இந்த மாநிலத்தின் முஸ்லிம்கள் தங்கள் வழிபாட்டை அதிகரிப்பார்கள் என்றும், இந்த உன்னத மாதத்தை பக்தியுடனும் பணிவுடனும் உயிர்ப்பிப்பார்கள் என்றும் அவர்கள் மூவரும் தங்கள் நம்பிக்கையை வெளிப் படுத்தினர்.

"உங்கள் வழிபாட்டை அதிகரித்து, இந்த உன்னதமான மாதத்தை முழு பக்தியுடனும் பணிவுடனும் உயிர்ப்பியுங்கள்" என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

"ரமலான் மாதம், மனிதர்களுக்கு வழிகாட்டியாகவும், நேர்வழியின் தெளிவான சான்றுகளாகும், நன்மையையும் தீமையையும் பிரித்தறிவிப்பதாகவும் குர்ஆன்  கூறுகிறது. இது இறக்கம் காட்ட வேண்டிய மாதம். எனவே, உங்களில் எவர் இந்த ரமலான் மாதத்தை அனுசரிப்பவர்கள் அவரகள் நோன்பு நோற்கட்டும் "

நாடு முழுவதும் உள்ள முஸ்லிம்கள் இன்று நோன்பு நோற்க தொடங்குவார்கள்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.