கோத்தா கினபாலு, பிப். 28 - சபா மாநிலத்தின் தெலுபிட் மற்றும் பைத்தான் ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை நேற்றிரவு 8.00 மணி நிலவரப்படி 118 குடும்பங்களைச் சேர்ந்த 394 பேராகப் பதிவாகியுள்ளது.
நேற்று காலை 8.00 மணி நிலவரப்படி 81 குடும்பங்களைச் சேர்ந்த 262 பேர் நிவாரண மையங்களில் தங்கியிருந்தனர்.
தெலுப்பிட்டில் ஒரு தற்காலிக நிவாரண மையம் புதிதாக திறக்கப்பட்டதாக சபா மாநில பேரிடர் மேலாண்மைக் குழு செயலகம் கூறியது.
இதனுடன் சேர்த்து இம்மாவட்டத்தில் திறக்கப்பட்ட துயர் துடைப்பு மையங்களின் எண்ணிக்கை ஐந்தாக உயர்வு கண்டுள்ளது. அம்மையங்களில் 100 குடும்பங்களைச் சேர்ந்த 340 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, பைத்தான் மாவட்டத்தில் வெள்ளத்தில் பாதிக்கப்பட்பவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அங்கு 18 குடும்பங்களைச் சேர்ந்த 54 பேர் உள்ள இரண்டு நிவாரண மையங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.
சபாவின் உட்புற மாவட்டங்களா டெலுபிட் மற்றும் பைத்தான் ஆகியவை கோத்தா கினபாலுவிலிருந்து கிழக்கே 200 கிலோ மீட்டர் மற்றும் 230 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளன.


