MEDIA STATEMENT

ஸ்ரீ செர்டாங் தொகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

23 பிப்ரவரி 2025, 12:15 PM
ஸ்ரீ செர்டாங் தொகுதியில் நிலவும் போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காண சட்டமன்ற உறுப்பினர் நடவடிக்கை

ஷா ஆலம், பிப். 23- ஸ்ரீ செர்டாங் தொகுதியில் நிலவும் சாலை போக்குவரத்து பிரச்சினைக்கு இவ்வாண்டு  தீர்வு காண்பது தொகுதி சட்டமன்ற உறுப்பினரின் முக்கிய இலக்காக உள்ளது.

உச்ச நேரங்களில் போக்குவரத்தை தணிப்பதற்கு ஏதுவாக கோத்தா பெர்டானாவுடன் இணைக்கும் சாலையை நிர்மாணிப்பது தொடர்பில் தமது தரப்பு பரிந்துரையை முன்வைத்துள்ளதாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அப்பாஸ் அஸ்மி கூறினார்.

சுமார் இரண்டு கோடி வெள்ளி செலவு பிடிக்கக்கூடிய இந்த இணைப்புச் சாலைத் திட்டத்தை அடுத்தாண்டு  அமல்படுத்த சுபாங் ஜெயா மாநகர் மன்றம் இணக்கம்  தெரிவித்துள்ளது என்று அவர்  சொன்னார்.

இந்த இணைப்பு சாலையின் வாயிலாக லெஸ்தாரி பெர்மாய், லெஸ்தாரி புத்ரா மற்றும் டேசாமினியம் ஆகிய குடியிருப்பு பகுதிகளைச் சேர்ந்த எளிதாக மக்கள் உள்ளே நுழைவதற்கும் வெளியேறுவதற்கும் வாய்ப்பு கிட்டும். தற்போது இப்பகுதிக்குச் செல்ல ஒரே வழி மட்டுமே உள்ளது என்று அவர் மீடியா சிலாங்கூரிடன் கூறினார்.

போக்குவரத்தைச் குறைப்பதற்காக பெர்சியாரான் லெஸ்தாரி புத்ராவில் அடுக்குச்சாலையை நிர்மாணிக்கும் திட்டம் இறுதிக்கட்டத்தில் உள்ளத் தகவலையும் அவர் வெளியிட்டார்.

நாற்பது கோடி வெள்ளி செலவிலான மேம்பாலத் திட்டமும் பொதுப்பணி அமைச்சு மற்றும் பொருளாதார அமைச்சின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. என அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, தாமான் லெஸ்தாரியில் பள்ளிவாசலை நிர்மாணிக்கும் திட்டம் இவ்வாண்டு தொடங்கும் என எதிர்பார்க்கப்படுவதாக அவர் மேலும் சொன்னார். 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.