புத்ராஜெயா, 23 பிப்ரவரி - வெளிநாட்டு முதலீட்டாளர்கள் மலேசியாவுக்கு வருவதற்கு விரைவான பொருளாதார மீட்சி மற்றும் நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் மக்களின் திறன்கள், கவர்ச்சிகரமான காரணிகளாக மாறிவிட்டன என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வர் இப்ராஹிம் கூறினார்.
கோவிட்-19 தொற்று நோய்க்குப் பிறகு மற்ற நாடுகள் மீண்டு வர சிரமப் படுகையில், மலேசியா எவ்வாறு வலுவான பொருளாதார வளர்ச்சியையும் அதிக முதலீட்டு வரவையும் பதிவு செய்ய முடிந்தது என்பதை வெளிநாட்டு தலைவர்களும் நிறுவனங்களும் கவனித்து வருவதாக அவர் கூறினார்.
"நம்மிடம் திறன்கள் உள்ளன என்று நான் நம்புகிறேன். மலேசியா அசாதாரணமானது. பல்வேறு இனங்கள் மற்றும் மாதங்களைக் கொண்ட ஒரு சமூகம் உலகில் எங்கு அமைதியாக வாழ முடியும்?
"பல்வேறு ஊழல்களால் பலவீனமடைந்த சில நாடுகள் உள்ளன. அதன்பிறகு கொவிட்-19 வந்தது.
"ஆனால் நாம், எல்லா சவால்களையும் தாண்டி இப்போது நல்ல வளர்ச்சி, அதிக முதலீடுகள் மற்றும் தரவு மையம் மற்றும் குறைக்கடத்தி (மைக்ரோ சிப்) மையங்களாக மாறி மீண்டும் முன்னேறி வருகிறோம்" என்று அவர் இன்று அலமண்டா மாலின் ''அலமண்டா பெர்வாஜா பாரு'' நிறைவு கொண்ட நிகழ்வில் கூறினார்.
வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்கும் மலேசியாவின் திறன் நாட்டை முன்னேற்றுவதற்கும் உயர்த்துவதற்கும் மக்களின் திறன்களில் உள்ளது என்று அன்வார் மேலும் கூறினார்.
"ஏன் (முதலீடுகள் வருகின்றன? ஏனெனில் அவர்கள் மக்களின் திறன்களைப் பார்க்கிறார்கள்.
"எனவே நமது இளைஞர்கள், நிர்வாகம், வர்த்தகர்கள் மற்றும் துப்புரவாளர்கள் வரை அதற்கான பாராட்டுக்கு உரியவர்கள் " என்று அவர் கூறினார்.
சீன மற்றும் தென்னாப்பிரிக்க அதிபர்கள் உட்பட மேலும் பல வெளிநாட்டு தலைவர்கள் இப்பொழுது இங்கு வருகை தருவார்கள் என்றும் மலேசியா எதிர்பார்க்கிறது.
ஆனால் "ரமலான் மாதத்தில், (வெளிநாட்டு தலைவர்களின் வருகைகள்) ஒத்திவைக்கப்படும், ஏப்ரல் மாதத்திற்குப் பிறகு மீண்டும் தொடங்கும்" என்று அன்வர் கூறினார்.
பெர்னாமா


