MEDIA STATEMENT

தாமான் செந்தோசாவுக்கு நகர அந்தஸ்து - சொத்து மதிப்பு உயரும், பொருளாதார வாய்ப்புகள் பெருகும்

23 பிப்ரவரி 2025, 7:20 AM
தாமான் செந்தோசாவுக்கு நகர அந்தஸ்து - சொத்து மதிப்பு உயரும், பொருளாதார வாய்ப்புகள் பெருகும்

ஷா ஆலம், பிப். 24- சுமார்  100,000 மக்கள் தொகையைக் கொண்டிருக்க வேண்டும் என்பது  உள்பட பல நிபந்தனைகளைப்  பூர்த்தி செய்த பின்னர் கிள்ளான்  தாமான் செந்தோசா  நேற்று முதல் நகர அந்தஸ்தைப் பெற்றுள்ளது.

கடந்த  2023ஆம் ஆண்டு முதல் குடியிருப்பாளர்கள் உட்பட தொடர்புடைய நிறுவனங்களுடன் நடந்தப்பட்ட தொடர்ச்சியான கூட்டங்கள் மற்றும் ஆய்வுகளைத் தொடர்ந்து  கிள்ளான் டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமீட் ஹுசைன்  நகர பிரகடனம் தொடர்பான இந்த  அறிவிப்பை நேற்று வெளியிட்டார்.

இந்த நகரத்தின் தோற்றத்தை மாற்றுவதில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும் வகையில் செந்தோசா நகர செயல் திட்டம் 2025-2035 தயாரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இங்கு சொத்து மதிப்பு அதிகரிப்பைக் காணும் என்பதோடு  பொருளாதார வாய்ப்புகள் மற்றும் முதலீடுகளையும்  இங்கு ஈர்க்க முடியும்.

செந்தோசா  நகரம் தொடர்ந்து முன்னேறவும் அனைத்து திட்டங்களும் நிறைவேற்றப்படுவதை  உறுதிசெய்ய அனைத்து குடியிருப்பாளர்களும் தொடர்புடைய நிறுவனங்களும் கிள்ளான் அரச மாநகர்  மன்றத்துடன் இணைந்து செயல்படவும்  முடியும் என்று நான் நம்புகிறேன் என்று அப்துல் ஹமிட் ஒரு அறிக்கையில் தெரிவித்தார்.

சுமார் 2,229 ஏக்கர் பரப்பளவு கொண்ட  இக்குடியிருப்பு பகுதியை நகர அந்தஸ்துக்கு மேம்படுத்த முன்மொழிந்த செந்தோசா  சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி. குணராஜ் அவர்களைத் தாம் பெரிதும் பாராட்டுவதாக   அப்துல் ஹமீட் குறிப்பிட்டார்.

செந்தோசா மிகவும் பழமையான குடியிருப்பு பகுதியாகும். அதன் எல்லைகள் 1963 ஆம் ஆண்டு வாக்கில் பத்து அம்பாட் தோட்ட   எல்லைகளிலிருந்து இது உருவானது. மேலும் இங்குள்ள விரைவான வளர்ச்சியும் அதன் மேம்பாட்டிற்கான அளவுகோல்களில் ஒன்றாக விளங்குகிறது என்று அவர் கூறினார்.

ஜாலான் கெபுன், ஜாலான் சுங்கை ஜாத்தி, ஜாலான் ராஜா நோங், ஜாலான் கெபுன் நெனாஸ் மற்றும் பெர்சியாரான் புத்ரி ஆகிய பகுதிகளை  இணைப்பதன் மூலம் செந்தோசா நகரம் ஒரு கேந்திர  முக்கிரத்துவ நிலையைக் கொண்டுள்ளது. இதில் அருகிலுள்ள இரண்டு நெடுஞ்சாலைகள் அதாவது ஷா ஆலம் விரைவுச்சாலை (கெசாஸ்) மற்றும் மேற்கு கடற்கரை விரைவுச்சாலை (டபள்யூ.சி.இ.) ஆகியவையும் அடங்கும்.

மேலும் பண்டார் செந்தோசா தென் கிள்ளானில்  உள்ள முக்கிய வளர்ச்சி மையங்களான அம்பாங் பொட்டானிக், பண்டார் புத்ரி, பண்டார் புத்ரா, பண்டார் புக்கிட் திங்கி 1 மற்றும் 2, பண்டார் பொட்டானிக், கோத்தா பாயுமாஸ், பண்டார் பார்க்லேண்ட் மற்றும் பண்டார் பெஸ்தாரி ஆகியவற்றுக்கு அருகில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது .

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.