MEDIA STATEMENT

வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் மன்னர்

22 பிப்ரவரி 2025, 4:38 AM
வெளிநாட்டில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார் மன்னர்

கோலாலம்பூர், பிப்ரவரி 22 - மலேசிய மன்னர் மேன்மைமிகு சுல்தான் இப்ராஹிம், வெளிநாட்டில் சிகிச்சை பெற்று இன்று காலை பாதுகாப்பாக நாடு திரும்பினார்.

சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூல் பக்கத்தில் பதிவேற்றப்பட்ட ஒரு பதிவின் படி, மாட்சிமை பொருந்திய  மன்னர் சிறப்பு விமானம்  மூலம் காலை 7 மணிக்கு சுபாங்கில் உள்ள ராயல் மலேசிய விமானப்படை தளத்தில்  இறங்கினார்.

சுல்தான் இப்ராஹிமின் வருகையை ராயல் ஹவுஸ்ஹோல்ட் கம்ப்ரோலர் டத்தோ ஜைலானி ஹாஷிம், இஸ்தானா நெகாரா கிராண்ட் சேம்பர்லைன் டத்தோ அசுவான் எஃபெண்டி ஜைராகித்னைனி மற்றும் இஸ்தானா நெகாரா அதிகாரிகள் வரவேற்றனர்.

"மாட்சிமை பொருந்திய மன்னரின்  உடல் நிலைக்காக பிரார்த்தனை செய்த அனைவருக்கும் சுல்தான் இப்ராஹிம் தனது நன்றியை தெரிவித்தார்" என்று அந்த பதிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாயன்று, இஸ்தானா நெகாரா ஒரு அறிக்கையில், சுல்தான் இப்ராஹிம் வெளிநாடுகளில் தசை எலும்பு வலிக்கு பழமைவாத சிகிச்சைக்கு உட்படுத்தப் பட்டதாக  அறிவித்தது.

 

- பெர்னாமா

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.