ராஜா மஹாடி பள்ளியில்  தமிழ், இலக்கிய வகுப்பு நேர மாற்றம்- பிரச்சினைக்கு தீர்வு காண குணராஜ் நடவடிக்கை

21 பிப்ரவரி 2025, 12:10 PM
ராஜா மஹாடி பள்ளியில்  தமிழ், இலக்கிய வகுப்பு நேர மாற்றம்- பிரச்சினைக்கு தீர்வு காண குணராஜ் நடவடிக்கை

(ஆர்.ராஜா)

கிள்ளான், பிப். 21-  இங்குள்ள தாமான் அண்டாலாஸ், ராஜா மஹாடி இடைநிலைப் பள்ளியில்  தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கிய வகுப்புகளை பள்ளி நேரத்திற்கு  பிந்தைய அமர்வுகளுக்கு மாற்றப்பட்டுள்ள பிரச்சினைக்கு சுமூகமான முறையில் தீர்வு காண நடவடிக்கை எடுக்கப்படும் என்று  செந்தோசா சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் ஜி.குணராஜ் உறுதியளித்துள்ளார்.

மாணவர்கள் மத்தியில்  கவலையை ஏற்படுத்தியுள்ள இந்த பாட நேர மாற்ற விவகாரம் குறித்து  பெற்றோர்களிடமிருந்து தாம் புகார்களைப் பெற்றுள்ளதாக இந்திய சமூகத்திற்கான  மந்திரி பெசாரின் சிறப்பு அதிகாரியுமான அவர் கூறினார்.

இந்தப் பிரச்சினையைக் கவனத்தில் கொண்டு உடனடியாக  விசாரிப்பதற்காக  தனது சிறப்பு அதிகாரி இளன் அவர்களை அனுப்பிய கல்வித் துணை அமைச்சருக்கு நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இதுதவிர,   கிள்ளான் மாவட்ட கல்வி அலுவலக அதிகாரிகள்  பள்ளிக்குச் சென்று விளக்கங்களைப் பெறவும் மாணவர்களின் நலன்களுக்கு ஏற்ற சிறந்த தீர்வைக் கண்டறியவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மாணவர்களின் நலன் கருதியும்  பொருத்தமான பள்ளி நேரங்களில் அவர்கள் தாய்மொழியில் கல்வி பெறும் உரிமையையும் கருத்தில் கொண்டு இந்தப் பிரச்சினையை சுமூகமான  தீர்க்க முடியும் என்று நம்புகிறேன்.

இதன் தொடராபான நிலவரங்களை  நான் தொடர்ந்து கண்காணித்து, பெற்றோர்கள் மற்றும் மாணவர்களின் குரல்கள் கேட்கப்படுவதை உறுதி செய்வேன் என  இன்று வெளியிட்ட அறிக்கையில் குணராஜ் கூறினார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.