" புக்கிட் ரோத்தான் பகுதியை ஒற்றுமையின் சின்னமாக பிரகடனப்படுத்த அனைவருடனும் விவாதிப்பேன், குறிப்பாக அமைச்சகத்துடன். அப்பகுதியை வர்த்தமானி செய்ய விவாதிப்பேன்".
புக்கிட் மெலாவத்தி மாநில சட்டமன்றத்தின் (DUN) ஒருங்கிணைப்பாளரான எஸ் தீபன்
"இங்குள்ள ஒருமைப்பாடு உணர்வை பிரதிபலிக்கும் வண்ணம் ஒரு சாலைக்கு பெயரிடவும் மாவட்ட அலுவலகத்திற்கு நான் பரிந்துரைப்பேன்" என்று அவர் சமீபத்தில் சந்தித்தபோது கூறினார்.
மீடியா சிலாங்கூர் புக்கிட் ரோத்தான் தனித்துவம் இன நல்லிணக்கம் குறித்து இரண்டு தொடர் சிறப்பு கட்டுரைகளை வெளியிட்டது, நூற்றுக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு சிறிய நகரம் தோன்றிய காலம் தொட்டு ஒற்றுமை உணர்வு வளர்க்கப் பட்டுள்ளது.
மேலும் இவ்விடம் கோலாலம்பூரிலிருந்து சுமார் 50 நிமிட பயணத்தில் அமைந்துள்ள புக்கிட் ரோத்தான், 200 மீட்டர் இடைவெளியில் நான்கு முக்கிய வழிபாட்டுத் தலங்களை கொண்டிருப்பதுடன் அங்குள்ள மக்களின் ஒற்றுமையும் அதன் தனித்துவத்தை காட்டுகிறது.
100 ஆண்டுகளுக்கும் மேலான பழமையான ஸ்ரீ சக்தி தேவஸ்தானம் கோவில், ஆன்-நூரியா மசூதிக்கு அருகில் அமைந்துள்ளது, அதைத் தொடர்ந்து தமிழ் மெதடிஸ்ட் தேவாலயம் மற்றும் மசூதிக்கு முன்னால் கட்டப்பட்ட ஒரு தனியார் சீனக் கோவிலும் உண்டு.








