ஷா ஆலம், பிப். 15- இங்குள்ள செக்சன் 24, டேவான் பெரிங்கினில் இன்று நடைபெற்ற பத்து தீகா தொகுதி நிலையிலான கார்னிவல் கெர்ஜெயா வேலை வாய்ப்புச் சந்தையில் மூலம் பல்வேறு துறைகளில் மொத்தம் 1,200 வேலை வாய்ப்புகள் வழங்கப்பட்டன.
சமூகப் பாதுகாப்பு நிறுவனத்தின் (சொக்சோ) ஆதரவுடன் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்ச்சியில் பன்னாட்டு நிறுவனங்கள் உட்பட 10 முதலாளிகள் பங்கேற்றதாக தொகுதி சட்டமற்ற உறுப்பினர் டேனியல் அல்-ரஷீட் தெரிவித்தார்.
ஷா ஆலம் குடியிருப்பாளர்கள் கவர்ச்சிகரமான சம்பள அளவுகோலுடன் கூடிய பொருத்தமான வேலைகளைக் கண்டுபிடிப்பதற்கான தேவை அதிகம் இருப்பதால் இந்த நிகழ்வுக்கு ஏற்பாடு செய்யப்பட்டது என அவர் குறிப்பிட்டார்.
குடியிருப்பாளர்கள் இந்த வாய்ப்பை முறையாகப் பயன்படுத்திக் கொள்வதன் மூலம் வீட்டிற்கு அருகில் இங்கு வேலை செய்வதற்குரிய வாய்ப்பினை பெற முடியும் எனக் கூறிய அவர், இனி கோலாலம்பூருக்குச் செல்ல வேண்டிய அவசியம் இராது எனத் சிம் நம்புவதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், பொறியியல் அறிவியல் துறையில் வழங்கப்படும் வேலை வாய்ப்புகளைக் கண்டறிய தாம் இங்கு வந்ததாக 26 வயதான அகமது தவ்பிக் இஸ்மாடி தெரிவித்தார்.
பொறியியல் அறிவியல் துறையில் வேலை வாய்ப்புகளைப் பெறுவது கடினமாக இருக்காது என்பதோடு தற்போதைய தேவையைப் பொறுத்து அது இருக்கும் எனத் தாம் நம்புவதாக தனியார் துறையில் இன்னும் நடைமுறைப் பயிற்சி பெற்று வரும் அவர் சொன்னார்.
நான் கடந்த கடந்த இரண்டு வாரங்களாகத்தான் நான் வேலை தேட ஆரம்பித்துள்ளேன். இதுவரை வேலை தேடுவதில் எனக்கு எந்த சிரமமும் தெரியல்லை. ஆனால் எதிர்காலம் என்னவாக இருக்கும் என்று தெரியவில்லை என்று ஜெர்மனியின் ஆஃபென்பர்க் பல்கலைக்கழகத்தில் உயிரியல் தொழில்நுட்பத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவரான அவர் கூறினார்.
கடந்த இரண்டு மாதங்கள் வேலையில்லாமல் இருந்த பிறகு கணக்கியல் துறையில் உடனடியாக வேலை கிடைக்கும் என நம்புவதாக 26 வயதான ஏ ஷர்வினி குறிப்பிட்டார்.
நான் இரண்டு மாதங்களாக வேலை தேடிக்கொண்டிருக்கிறேன், ஆனால் இன்னும் எந்த அதிர்ஷ்டமும் கிடைக்கவில்லை. புதிய வேலை தேடுவதும் சவாலானதுதான். ஆனால் நான் பின்வாங்க மாட்டேன் என்று அவர் கூறினார்.








