ANTARABANGSA

போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியது இஸ்ரேல்- தென் லெபனானில் வீடுகளுக்குத் தீவைப்பு

13 பிப்ரவரி 2025, 4:33 AM
போர் நிறுத்த உடன்படிக்கையை மீறியது இஸ்ரேல்- தென் லெபனானில் வீடுகளுக்குத் தீவைப்பு

பெய்ரூட், பிப். 13 - இஸ்ரேலியப் படைகள் தென் லெபனானில் உள்ள பல வீடுகள் மற்றும்  ஒரு பண்ணைக்கு நேற்று தீவைத்தன. இது சமீபத்திய  போர்நிறுத்த உடன்படிக்கையின்   மீறலாகும் என்று உள்ளூர் ஊடகங்களை மேற்கோள் காட்டி அனடோலு ஏஜென்சி தெரிவித்துள்ளது.

அல் -ஆடைசா நகரில் இஸ்ரேலியப் படைகள் பல வீடுகளுக்கு தீவைத்ததாக

லெபனான் செய்தி நிறுவனம் கூறியது.

இஸ்ரேலியப் படைகள் பின்ட் ஜபீலின் புறநகர்ப் பகுதியிலும் துப்பாக்கிச் சூடு நடத்தியதோடு  அய்தா அல்-ஷாப் எல்லைப் பகுதியில் உள்ள ஒரு பண்ணைக்கு வெடி வைத்ததாக ஒளிபரப்பாளர் தெரிவித்தார்.

இச்சம்பவத்தில் யாருக்கும் காயங்கள்  ஏற்படவில்லை. அங்கு

கடந்தாண்டு நவம்பர் 27 முதல் எளிதில் முறியக்கூடிய  போர்நிறுத்தம் அமலில் உள்ளது. இது இஸ்ரேலுக்கும் ஹெஸ்புல்லாவிற்கும் இடையே பல மாதங்களாக நிகழ்ந்த  துப்பாக்கிச் சண்டையை முடிவுக்குக் கொண்டுவந்தது.

போர் நிறுத்தம் அமலில்  இருந்தபோதிலும், இஸ்ரேல் கிட்டத்தட்ட 900  போர் நிறுத்த மீறல்களைச் செய்துள்ளது. பெண்கள் மற்றும் சிறார்கள் உட்பட லெபனானில்  எண்ணற்ற  மக்களைக் கொன்று பலரைக் காயப்படுத்தியுள்ளது.

இந்த போர் நிறுத்த ஒப்பந்தத்தின் கீழ் இஸ்ரேல்  கடந்த ஜனவரி 26 ஆம் தேதிக்குள் தென் லெபனானிலிருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும்.  ஆனால், இஸ்ரேல் ஒப்பந்தத்திற்கு இணங்க மறுத்ததால் பிப்ரவரி 18 ஆம் தேதி வரை காலக்கெடு நீட்டிக்கப்பட்டது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.