MEDIA STATEMENT

சிலாங்கூர் மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான  ஆண்டு மானியத்திற்கு  விரைந்து விண்ணப்பிக்க - பாப்பா ராய்டு கேட்டுக்கொண்டார்

7 பிப்ரவரி 2025, 4:33 AM
சிலாங்கூர் மாநில அரசின் தமிழ்ப்பள்ளிகளுக்கான  ஆண்டு மானியத்திற்கு  விரைந்து விண்ணப்பிக்க - பாப்பா ராய்டு கேட்டுக்கொண்டார்

ஷா ஆலம் பிப் 6;-சிலாங்கூர் மாநில  பள்ளிகளுக்கான  மாநில அரசின் 2025 ம் ஆண்டு மானியத்திற்கான விண்ணப்பங்களை  இம்மாதம் பிப்ரவரி  28 ந் தேதிக்கு முன் அனைத்து பள்ளிகளும்  அனுப்பி வைக்க கேட்டுக்கொள்ளப் படுகிறது.

மாநில அரசின்  உதவித்தொகைக்கு  விண்ணப்பம் செய்யும் பள்ளிகள்  அதற்கு வழங்கப்பட்ட பரிந்துரைகள் மற்றும் விதிகளுக்கு  ஏற்ப இணையதளத்தின்   வழி  https://ssipr-daftar.selangor.gov.my/login   என்ற விண்ணப்பங்களை   அனுப்பி வைக்க வேண்டும். கீழ்காணும் போஸ்டரில்  கொடுக்கப்பட்ட  விவரங்கள் படி விண்ணபிக்கவும் மேற்படி தகவல்களுக்கு bantuansekolah@selangor.gov.my  அல்லது 03-55212595 தொடர்புக்கொள்ளலாம்.

பரிந்துரைகள் மற்றும் விதிகளை பின்பற்றாத  பள்ளிகளின்   விண்ணப்பங்கள்  பரிசீலனைக்கு உட்படாமல் போவதை  தவிர்க்க பரிந்துரைகளை  நன்கு கவனத்தில் கொண்டு செயல்படும் படி பெற்றோர் ஆசிரியர் சங்கங்கள், மற்றும்  பள்ளி வாரியங்களுக்கு மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் மாண்புமிகு பாப்பா ராய்டு வேண்டுகோள் விடுத்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.