MEDIA STATEMENT

கோத்தா அங்கிரிக் தொகுதியில்  நாளை இலவச மருத்துவப் பரிசோதனை

1 பிப்ரவரி 2025, 12:44 PM
கோத்தா அங்கிரிக் தொகுதியில்  நாளை இலவச மருத்துவப் பரிசோதனை

ஷா ஆலம், பிப். 1- கோத்தா அங்கிரிக் தொகுதி நிலையிலான  சிலாங்கூர் சாரிங்  இலவச மருத்துவப் பரிசோதனைத் திட்டம்  வரும் பிப்ரவரி 2ஆம் தேதி இங்குள்ள செக்சன் 2, சூராவ் அல் அன்சோரில்​​நடைபெறவுள்ளது.

காலை 9.00 மணி முதல் மாலை 3.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில் உடல் பரிசோதனையோடு இரத்தம், சிறுநீர், புற்றுநோய், கண்கள், பற்கள் உள்ளிட்ட சோதனைகளும் இடம்பெறும்.

மாநில அரசின் ஏற்பாட்டிலான  இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தில் பங்கேற்று பயனடைவதற்கான்  வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளும்படி பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

செலங்கா செயலியில் உள்ள  தொடக்க மதிப்பீட்டு பாரத்தின் மூலம் ஒவ்வொருவருக்கும்  இடர் மதிப்பீடு செய்யப்படுவதால் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்குபெற விரும்புவோர்  அந்த செயலியில் முன்னதாக  பதிவு செய்ய ஊக்குவிக்கப்படுகிறார்கள்.

பின்வரும் நான்கு வழிமுறைகளைப் பயன்படுத்தி சிலாங்கூர் சாரிங் திட்டத்தில் பதிவு செய்யலாம்.

1. செலங்கா செயலியைப் பதிவிறக்கம் செய்யவும்

2.  சிலாங்கூர் சாரிங் பட்டனை அழுத்தவும்

3. கேள்வித்தாள் படிவத்தை பூர்த்தி செய்யவும்

4. மருத்துவப் பரிசோதனை நடைபெறும் இடம் மற்றும் தேதியைத் தேர்ந்தெடுக்கவும்

கடந்த 2022ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட  இந்த சிலாங்கூர் சாரிங் இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தை  தொடர மாநில அரசு

2025 வரவு செலவுத் திட்டத்தில் 20 லட்சம் வெள்ளியை ஒதுக்கியுள்ளது.

இந்த இலவச மருத்துவ பரிசோதனைத் திட்டத்தின் வாயிலாக 2024ஆம் ஆண்டு  7,000 பேர் பயனடைந்ததாகவும்  அவர்களில் 38 சதவீதம் பேர் 46 முதல் 64 வயதுடையவர்கள் என்றும் மந்திரி   புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கடந்தாண்டு டிசம்பர் 17 ஆம் தேதி கூறியிருந்தார்.

குடும்ப மருத்துவ வரலாறு, உடல் பருமன் மற்றும் ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையைக் கடைப்பிடிப்பவர்கள் முன்கூட்டியே நோயைக் கண்டறிய உதவுவதற்காக இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.