MEDIA STATEMENT

பிப்.8ஆம் தேதி சுபாங் ஜெயாவில் வாகன பயன்பாடு இல்லா தினம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

1 பிப்ரவரி 2025, 7:14 AM
பிப்.8ஆம் தேதி சுபாங் ஜெயாவில் வாகன பயன்பாடு இல்லா தினம்- பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு

ஷா ஆலம், பிப். 1-  சுபாங் ஜெயா மாநகர் மன்றம் வரும் பிப்ரவரி 8 ஆம் தேதி தாசேக் ஸ்ரீ செர்டாங்கில் நடைபெறும் 2025ஆம் ஆண்டிற்கான சுபாங் ஜெயா நிலையிலான  வாகன பயன்பாடு இல்லா தின நிகழ்வில் கலந்து சிறப்பிக்க  பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 7.00 மணி முதல் 11.00 மணி வரை நடைபெறும் இந்த நிகழ்வில்  பார்வையாளர்களுக்கு வண்ணம் தீட்டுதல், நாட்டுப்புற விளையாட்டு, ஏரோபிக்ஸ் உள்ளிட்ட பல்வேறு சுவாரசியமான நிகழ்வுகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மாநகர் மன்ற  நிர்வாகம் தெரிவித்தது.

இலவச சுகாதாரப் பரிசோதனைகள், டிங்கி பரவலைக் கண்டறிந்து ஒழிப்பதற்கான திட்டம், மக்கள் நட்பு முகப்பிடத் திறப்பு மற்றும் இராணுவச் சேமப்படையை  மேம்படுத்துதல் ஆகியவையும் நடைபெறவுள்ளன.

வெற்றியாளர்களுக்கு பங்கேற்புச் சான்றிதழ்கள் மற்றும் ரொக்கப் பரிசுகள் காத்திருக்கின்றன!! எம்.பி.எஸ் ஜே. கியூஆர் குறியீட்டை ஸ்கேன் செய்யலாம் அல்லது பதிவு மற்றும் கூடுதல் தகவலுக்கு  https ://docs.google.com/.../1ipCZ4a1jbhqb1vif.../viewform... இணைப்பில் தொடர்பு  கொள்ளும்படி மாநகர் மன்றம் பொதுமக்களை கேட்டுக் கொண்டது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.