MEDIA STATEMENT

கிசிஞ்சானில்   பொங்கல் வைபவத்தில் சிறுவர் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள்.

1 பிப்ரவரி 2025, 4:27 AM
கிசிஞ்சானில்   பொங்கல் வைபவத்தில் சிறுவர் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள்.
கிசிஞ்சானில்   பொங்கல் வைபவத்தில் சிறுவர் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள்.
கிசிஞ்சானில்   பொங்கல் வைபவத்தில் சிறுவர் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள்.
கிசிஞ்சானில்   பொங்கல் வைபவத்தில் சிறுவர் மற்றும் மகளிரை ஊக்குவிக்கும் பல நிகழ்வுகள்.

   

சிகிஞ்சான் பிப் 1 ; 2025 பொங்கல் வைபவம்  இன்று சிலாங்கூரின் நெற்களஞ்சியமான சிகிஞ்சானில்  விவசாய மக்களின்  மத்தியில் கொண்டாட மாநில  அரசு எடுத்த முடிவுக்கு ஏற்ப  வெகு  விமரிசையாக ஏற்பாடு செய்யப்பட்டது.இன்று காலை 9.00 மணிக்கு பந்திங் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாநில ஆட்சிக்கழு உறுப்பினருமான மாண்புமிகு பாப்பா ராய்டு அவர்கள் மகளிர் கோலப்போட்டியை தொடங்கி வைத்த பின் பற்பல விளையாட்டுகளுடன்  மக்கள் பல்வேறு பொங்கல்  நிகழ்வுகளில்  கலந்து கொண்டனர். 

 இன்றைய பொங்கலுக்கு சூரிய பகவானும் அவரின் ஆசிர்வாதத்தை வழங்கும் வண்ணம்  தெளிந்த காலை  சூரிய ஒளி கதிர்களை நெல் வயல்கள் மீது வீசி, குளிர்ந்த காற்றுடன்  மங்களம் ஓளிர,  பானைகளில்  பொங்கல் பொங்கி வழிய  மக்கள் ஆனந்தமாக பொங்கலோ பொங்கல் என குரல் எழுப்ப கம்பிரமாக மலர்ந்தது  இன்றைய  பொங்கல்  திருவிழா

பொங்கல் விவசாயத்திற்கு மதிப்பளிக்கும் ஒரு விழாவாகவும் உழவர் திருநாளாகவும் விளங்கும் காரணத்தால் இவ்வாண்டு பொங்கல் விழாவை நெல் விளையும் பூமியான சிகிஞ்சானில் நடத்த தாங்கள் முடிவெடுத்ததாக மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கு ஆட்சிக் குழு  உறுப்பினருமான பாப்பா ராய்டு  தெரிவித்தார்.

இந்த பொங்கல் விழா சிகிஞ்சான், சுங்கை பூரோங்,  பாரிட் 4,    ஸ்ரீ மகா மாரியம்மன் ஆலயத்தில் காலை 8.00 மணி முதல்  பிற்பகல் 1.00 மணி வரை நடைபெறும். இந்த நிகழ்வில் தமிழர்களின்   பாரம்பரிய விளையாட்டுகள் மற்றும் கலைகள் சார்ந்த அங்கங்களுக்கு  முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.

.அங்கு  கூடிய மக்களை கவரும் வண்ணம் பல்வேறு நிகழ்ச்சிகள் மற்றும்  பொழுதுபோக்கு கலாச்சார விளையாட்டுகளை படைத்து  மக்களை   குதுகலப்படுத்தினர்.    அது பொங்கல் வைப்பதில் தொடங்கி ,   உறி அடித்தல் , கோலம் போடுதல் , மாலை கட்டுதல், வர்ணம் தீட்டுதல்  தோரணம் கட்டுதல் சாக்கு போட்டி என்று பல நிகழ்வுகளில்  கலந்து கொண்ட மக்களுக்கு   அதிர்ஷ்ட குலுக்குடன்  மதிய  சைவ உணவும்  வழங்கப்பட்டது.

இன்று இரவு 7.00 மணி தொடங்கி இரவு 11.00 மணி வரை நடைபெறும் அறுசுவை விருந்துடன் கூடிய பொங்கல் நிகழ்வுக்கு மந்திரி புசார்  டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தலைமையேற்பார். என மாநில  ஆட்சிக்குழு உறுப்பினர்களும் மற்றும் சிறப்பு பிரமுகர்களும் கலந்து கொள்வர் என்றார் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்  திரு.பாப்பா ராய்டு  தெரிவித்தார்.

இன்று  இரவு இந்த பொங்கல் விழாவின் சிறப்பு அங்கமாக மூத்த குடிமக்களுக்கு மந்திரி புசார் புடவைகள் அன்பளிப்பாக வழங்குவார் என்றும் பாப்பாராய்டு  தெரிவித்தார்.   இந்த பொங்கல் விழாவில் பொதுமக்கள் திரளாக கலந்து சிறப்பிக்கும் படி  பாப்பராய்டு கேட்டுக் கொண்டார்.

 

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.