கோல திரங்கானு, ஜன. 31- மனிதருடையவை என சந்தேகிக்கப்படும் 34
எலும்புத் துண்டுகள் இங்குள்ள பத்து பூரோக் 2 கடற்கரையில் நேற்றிரவு
கண்டு பிடிக்கப்பட்டன.
அரசு துறைக்குச் சொந்தமான கைவிடப்பட்ட ஊழியர் குடியிருப்புக்கு
பின்னால் உள்ள புதரில் அந்த எலும்புத் துண்டுகளை பொது மக்கள் கண்டு
போலீசாருக்கு தகவல் கொடுத்ததாக கோல திரங்கானு மாவட்ட போலீஸ்
தலைவர் அஸ்லி முகமது நோர் கூறினார்.
அந்த எலும்புத் துண்டுகள் யாவும் சேகரிக்கப்பட்டு அடுத்தக் கட்ட
நடவடிகைக்காக சுல்தானா நுர் ஸஹிரா மருத்துவமனையின் உடற்கூறு
பிரிவு மற்றும் மலேசிய இரசாயன இலாகாவுக்கு அனுப்பப்பட்டதாக அவர்
சொன்னார்.
இந்த சம்பவம் தொடர்பில் நேற்றிரவு 10.10 மணியளவில் காவல் துறைக்கு
தகவல் வந்தது. இதனைத் தொடர்ந்து திரங்கானு மாநில குற்றத் தடுப்பு
பிரிவின் தடயவியல் துறையின் உதவியுடன் கோல திரங்கானு மாவட்ட
குற்றப்புலனாய்வுத் துறையினர் விசாரணையைத் தொடக்கினர் என்று
அவர் தெரிவித்தார்.
அந்த எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்ட இடம் முன்பு இடுகாடாக
பயன்படுத்தப்பட்ட இடமா அல்லது தனியாருக்குச் சொந்தமானதா
என்பதைக் கண்டறிய விசாரணை நடத்தி வருகிறோம் என அவர்
குறிப்பிட்டார்.
மருத்துவ மற்றும் இரசயான சோதனைகளுக்குப் பின்னரே இறந்தவர் யார்?
பாலினம் மற்றும் எவ்வளவு நாட்களுக்கு முன் இறந்தார் என்பன போன்ற
கேள்விகளுக்கு விடை பெற முடியும் என அவர சொன்னார்.
ஆகவே, இந்த எலும்புகள் கண்டு பிடிக்கப்பட்டது தொடர்பில் யாரும்
ஆருடங்களை வெளியிட வேண்டாம் என பொது மக்களை அவர்
கொண்டார்.


