MEDIA STATEMENT

ஹிரோஷிமாவில் மலேசிய மாணவியை காணவில்லை

30 ஜனவரி 2025, 8:04 AM
ஹிரோஷிமாவில் மலேசிய மாணவியை காணவில்லை

கோலாலம்பூர், ஜன. 30- ஜப்பானில் உள்ள ஹிரோஷிமாவில்  மலேசிய மாணவி ஒருவர் திங்கள்கிழமை இரவு முதல் பல்கலைக்கழக  வளாகத்திற்குத் திரும்பாததைத் தொடர்ந்து அவர் காணாமல் போனதாக ஜப்பானில் உள்ள மலேசிய மாணவர் சங்கம் (எம்.எஸ்.ஏ.ஜே.) புதன்கிழமை தெரிவித்தது.

குரே கோ கோசன் கல்விக் நிறுவனத்தின் மாணவியான நூரின் ஹன்னானி ஹஃபிஸி (வயது 21) ஒரு முதுகுப்பை, பணப்பை மற்றும் கடப்பிதழுடன்  வளாகத்தை விட்டு வெளியேறியதாகக் கூறப்படுகிறது என்று எம்.எஸ்.ஏ.ஜே   தனது அதிகாரப்பூர்வ முகநூல் பக்கத்தில் தெரிவித்தது.

அந்த மாணவி காணாமல் போனது குறித்து குறித்து கோசென் பல்கலைக்கழக நிர்வாகம்  காவல்துறையில் புகார் அளித்துள்ளது  என்று அககுறிப்பில் கூறப்பட்டுள்ளது.

ஹன்னானி  காணாமல் போனது பற்றிய தகவல்களைப் பரப்புவதற்கு சமூகத்தின் உதவியை  எம்.எஸ்.ஏ.ஜே.    கோருகிறது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.