MEDIA STATEMENT

கிள்ளான்  இன்று மதியம் 1 மணிக்கு  ஆரோக்கியமற்ற காற்றின்அளவீடை பதிவு செய்தது.

29 ஜனவரி 2025, 9:16 AM
கிள்ளான்  இன்று மதியம் 1 மணிக்கு  ஆரோக்கியமற்ற காற்றின்அளவீடை பதிவு செய்தது.

ஷா ஆலம், ஜனவரி  29 ; கிள்ளான் இன்று பிற்பகல் 1 மணி நிலவரப்படி ஆரோக்கியமற்ற காற்று மாசு குறியீட்டை (ஏபிஐ) 162 ஆகப் பதிவு செய்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறை தெரிவித்துள்ளது.

மலேசிய காற்று மாசு குறியீட்டு மேலாண்மை அமைப்பின் (அபிம்ஸ்) வலைத்தளத்தின் மூலம் சிலாங்கூரில் உள்ள மேலும் மூன்று இடங்கள் மிதமான AQI அளவீடுகளைப் பதிவு செய்துள்ளன, அவை ஜோஹன் செத்தியா, ஷா ஆலம் மற்றும் பெட்டாலிங் ஜெயா ஆகும்.

கோலாலம்பூரில் உள்ள சிராஸ் மற்றும் புடு ஆகிய இடங்களிலும், பேராக், பினாங்கு, கெடா, கிளாந்தன், திரங்கானு, பகாங் மற்றும் ஜோகூர் ஆகிய இடங்களிலும் மிதமான AQI அளவீடுகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

காற்றின் தரக் குறியீடு 0 முதல் 50 வரை இருந்தால் அது நல்ல தரமாகவும், 51-100 மிதமான தரமாகவும், 101-200 ஆரோக்கியமற்ற தரமாகவும், 201-300 க்கு மேல் மோசமான தரமாகவும், 300 க்கு மேல் அபாயகரமான தரமாகவும் இருக்கும்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.