ANTARABANGSA

பாலஸ்தீனர்களை காஸாவுக்கு வெளியே குடியேற்ற அதிபர் டிரம்ப் பரிந்துரை

26 ஜனவரி 2025, 8:02 AM
பாலஸ்தீனர்களை காஸாவுக்கு வெளியே குடியேற்ற அதிபர் டிரம்ப் பரிந்துரை

வாஷிங்டன், ஜன. 26 - பாலஸ்தீனர்களை காஸாவிலிருந்து எகிப்து மற்றும் ஜோர்டான் போன்ற அண்டை நாடுகளுக்கு இட மாற்றம் செய்ய அமெரிக்க அதிபர் டோனால்ட் டிரம்ப் முன்மொழிந்துள்ளார். இதற்கு ஜோ பைடனின் முன்னாள் நிர்வாகம் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது என்று அனாடோலு ஏஜென்சி   தெரிவித்துள்ளது.

ஜோர்டான்  இரண்டாம் மன்னர் அப்துல்லாவுடன் தொலைபேசி வழி தொடர்பு கொண்டபோது   இந்த விஷயத்தை தாம் எழுப்பியதாக  சனிக்கிழமையன்று லாஸ் ஏஞ்சல்ஸிலிருந்து மியாமிக்கு புறப்படுவதற்கு முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியபோது  டிரம்ப்  தெரிவித்தார்.

மேலும், இது குறித்து தாம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) எகிப்திய அதிபர் அப்டில்- ஃபாத்தா அல்-சிசியுடன் பேசுவதற்கான சாத்தியம் உள்ளது என்றும்  என்றும்  கூறினார்.

நான் அவரிடம் (ஜோர்டான் மன்னர்) பேசினேன்.  ஏனென்றால் நான் இப்போது முழு காஸா பகுதியையும் பார்க்கிறேன். அது  முற்றிலும்  சீர்குலைந்து காணப்படுகிறது.

அவர் (ஜோர்டான் மன்னர்) மக்களை அழைத்துச் செல்ல வேண்டும் என  நான் விரும்புகிறேன். எகிப்தும் அதே போல் காஸா  மக்களை அழைத்துச் செல்ல விரும்புகிறேன். நான் நாளை ஜெனரல் அல் சிசியுடன் பேச இயலும்  என்று நம்புகிறேன். எகிப்தும் ஜோர்டானும் மக்களை ஏற்றுக் கொள்ள  வேண்டும் என்று நான் விரும்புகிறேன்  என்று டிரம்ப் குறிப்பிட்டார்.

நீங்கள் ஒன்றரை மில்லியன் மக்களைப் பற்றி பேசுகிறீர்கள். நாங்கள் அதை முழுவதுமாக சரி செய்ய  விரும்புகிறோம்.  பல நூற்றாண்டுகளாக அது பல மோதல்களைக் எதிர்நோக்கிக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும். மேலும், ஏதாவது நடக்க முடியும் என்று எனக்குத் தெரியவில்லை, என்று அவர் மேலும் கூறினார்.

காஸாவை "ஒரு இடிப்புத் தளம்" என்று  அமெரிக்க அதிபர் வர்ணித்தார், கிட்டத்தட்ட எல்லாமே இடிக்கப்பட்டு மக்கள் அங்கே இறந்து கொண்டிருக்கிறார்கள். எனவே நான் சில அரபு நாடுகளுடன் தொடர்பு கொண்டு அவர்கள் ஒரு மாற்றத்திற்காக நிம்மதியாக வாழக்கூடிய வேறு இடத்தில் வீடுகளை கட்ட விரும்புகிறேன்.

இந்த நடவடிக்கை "தற்காலிகமானதாக இருக்கலாம் அல்லது நீண்டகால அடிப்படையிலும்  இருக்கலாம் என்று அவர் தெரிவித்தார்.

எனினும், பைடன்  நிர்வாகம் காஸா குடியிருப்பாளர்களை தங்கள் பகுதிக்கு  வெளியே இடமாற்றம் செய்வதை எதிர்த்துள்ளது.   சாத்தியமான அமைதி மற்றும் இரு-நாட்டுத் தீர்விற்குப் பிறகு காஸா மக்கள் தங்கள் வீடுகளுக்குத் திரும்ப வேண்டும் என்று வாதிட்டது.

இஸ்ரேலின் இனப்படுகொலைப் போரில் 47,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனர்கள் கொல்லப்பட்டுள்ளனர். அவர்களில் பெரும்பாலோர் பெண்கள் மற்றும் சிறார்களாவர். மேலும்  111,000 க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.