ஷா ஆலம், ஜன. 26- சுங்கை கோங் ஆற்று நீர் மாசடைந்த சம்பவம் தொடர்பான வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் வழக்கிலிருந்தும் அது தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவித்த செலாயாங் செஷன்ஸ் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வது அரசு வழக்கறிஞரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது..
தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யும் அதிகாரம் உட்பட வழக்குத் தொடரும் அதிகாரம் அரசு வழக்கறிஞரின் அதிகார வரம்பிற்கு உட்பட்டது என சிலாங்கூர் மாநில சட்ட ஆலோசனைக் குழு மாநில அரசிடம் தெரிவித்துள்ளது என்று சுற்றுச்சூழல் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் ஜமாலியா ஜமாலுடின் கூறினார்.
மாநில சட்ட ஆலோசனை அலுவலகம் மேல்முறையீடு செய்வதற்கான பரிந்துரைகளை மட்டுமே
சிலாங்கூர் அரசு வழக்குரைஞருக்கு வழங்க முடியும். மேலும் இது சட்டத்துறைத் தலைவரின் பரிசீலனைக்கு உட்பட்டது.
மேலே உள்ள சட்டத்தின் விதிகளின் கீழ் குற்றச்சாட்டுகளுக்கான வழக்குத் தொடரின் முடிவு மற்றும் பொருத்தமான குற்ற ஷரத்துகளை வழங்குவதையும் அதே நேரத்தில் அதிக தண்டனை வழங்குவதையும் கணக்கில் எடுத்துக்கொள்வதாகும் என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் தெரிவித்தார்
கடந்த 2020 செப்டம்பர் மாதம் ரந்தாவ் பஞ்சாங் நீர் சுத்திகரிப்பு நிலையமான சுங்கை சிலாங்கூர் 1, 2 மற்றும் 3 ஆகியவற்றில் பணி நிறுத்தத்தை ஏற்படுத்திய சுங்கை கோங் ஆற்று நீர் மாசு சம்பவம் தொடர்பான குற்றச்சாட்டுகளிலிருந்து ஐந்து பேரும் விடுவிக்கப்படுவதாக செலாயாங் செலாயாங் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.
நீர் ஆதாரங்களை மாசுபடுத்துவோர் விஷயத்தில் சிலாங்கூர் அரசு ஒருபோதும் சமரசம் செய்து கொள்ளாது என்றும் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ஜமாலியா வலியுறுத்தினார்.
மாநிலத்தின் நீர் ஆதாரங்களை மாசுபடுத்தும் சாத்தியமுள்ள சந்தேகத்திற்கிடமான செயல்களைப் பற்றி புகாரளிப்பது மட்டுமல்லாமல், நீர் ஆதாரத்தை மாசுபடுத்தக்கூடிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டாம் என்றும் அவர் பொதுமக்களுக்கு நினைவூட்டினார்.








