ANTARABANGSA

அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தின் எட்டு  மலேசிய மாணவர்கள் விபத்தில் சிக்கினர்

26 ஜனவரி 2025, 7:17 AM
அல்-அஸ்ஹார் பல்கலைக்கழகத்தின் எட்டு  மலேசிய மாணவர்கள் விபத்தில் சிக்கினர்

கோலாலம்பூர், ஜன. 26- எகிப்தில் உள்ள அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 8 மலேசிய மாணவர்கள் சமயக் கல்விப் பயணம் மேற்கொண்டு போர்ட் சைட் நோக்கிச் சென்றபோது சாலை விபத்தில் சிக்கி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

சிறு காயங்களுக்கு ஆளாகியுள்ளன  ஐந்து மாணவர்கள் வெளிநோயாளிகளாக சிகிச்சை பெற்றனர் என்று மலேசியா எகிப்து கல்வித் துறை (இ.எம.ஐ.) கூறியது.

வார்டில் சிகிச்சை பெற்ற மூன்று மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக கெய்ரோவில் உள்ள சைட் கலால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர் என்று அது குறிப்பிட்டது.

இந்த சம்பவம் அல்-அஸ்ஹர் பல்கலைக்கழகத்தின் கவனத்தை ஈர்த்தது.  சிகிச்சைக்கு உதவவும் மருத்துவமனை நடைமுறைகளை எளிதாக்கவும் போர்ட் சைட் வளாகத்தின் இஸ்லாமிய  மற்றும் அரபு மொழி (மாணவர்கள்) புலத்தின் அதிகாரிகளை அந்த உயர்கல்விக்கூடம் அனுப்பியது.

மேலும் மாணவர்களின் உடல்நிலையைப் பார்ப்பதற்காக இ.எம்.ஐ முதன்மைச் செயலாளர் (கல்வி), அகமது  சலேஹுடின் ஷாபி மற்றும் முகமது நஜிருல் முபின் அப்துல் ரஹ்மான் ஆகியோர் சலாம் மருத்துவமனைக்கு  விரைந்தனர்.

மாணவர்களை எப்பொழுதும் கவனமாகவும் விழிப்புடனும் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு இ.எம்.ஐ.  அறிவுறுத்தியது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.