MEDIA STATEMENT

பிரதமர் அன்வாருடன் பேரரசர் காலை உணவருந்தினார்

26 ஜனவரி 2025, 5:37 AM
பிரதமர் அன்வாருடன் பேரரசர் காலை உணவருந்தினார்

கோலாலம்பூர், ஜன.26-  மாட்சிமை தங்கிய பேரரசர்  சுல்தான் இப்ராஹிம் இன்று இங்குள்ள மஸ்ஜிட் இந்தியாவிலுள்ள  உள்ள உணவகத்தில் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமுடன் காலை உணவருந்தினார்.

செமுவா ஹவுஸில் உள்ள  நாசி லெமாக் பூரோங் ஹந்து கிளையில்  பிரதமருடன் பேரரசர் நாசி லெமாக்  உணவை உட்கொண்டதாக  சுல்தான் இப்ராஹிம் சுல்தான் இஸ்கந்தரின் முகநூலில் வெளியிடப்பட்ட ஒரு பதிவு கூறியது.

மேன்மை தங்கிய பேரரசருடன்  கைகுலுக்கி படம் எடுக்கும் வாய்ப்பையும் பொதுமக்கள் தவறவிடவில்லை.

சிறார்களுடன் அளவலாவிய சுல்தான் இப்ராகிம், அவர்களிடம் நலன் விசாரிக்கவும் தவறவில்லை.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.