பத்துமலை ஜனவரி 25;- சிலாங்கூர் சுங்கை துவா சட்டமன்ற தொகுதியில் ''பொங்கல் விழா 2025'' பாரம்பரிய கலாச்சார விளையாட்டு கொண்டாட்டத்துடன் கென்சன் பிரதர்ஸ் அருள்மிகு ஸ்ரீ முனீஸ்வரர் ஆலயத்தில் நாளை 26 ஜனவரி ஞாயிற்றுக் கிழமை காலை 8,30 மணிக்கு நடத்த ஏற்பாடுகள் நடைபெறுவதாகவும்.
சுற்றுவட்டார மக்களை திரண்டு வந்து பங்கேற்கவும், கலந்துகொள்ளவும் அழைப்பதாக ஏற்பாட்டுக் குழுவினர் கூறினர்.
சிலாங்கூர் மந்திரி புசாரும் , கோம்பாக் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ அமிருடின் ஷாரி சிறப்பு வருகை புரிய உள்ள இந்நிகழ்வில் வருகையாளர்களை மகிழ்விக்க விழா அன்று மாலை 4.00 மணிவரை பல்வேறு பொழுதுபோக்கு நிகழ்வுகள் நடைபெறும் என்று தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த பொங்கல் விழாவை தமிழர் பாரம்பரிய நிகழ்வாகவும், கலாச்சாரத்தை கட்டி எழுப்பும் நிகழ்வாகவும் நடத்தவுள்ளதாக ஏற்பாட்டுக் குழுவினர் தெரிவித்துள்ளனர்.
அவர் அங்கு வரும் மக்களை கவரும் வண்ணம் நிகழ்ச்சி நிறைவடையும் வரை பல்வேறு பொழுது போக்கு மற்றும் கலாச்சார விளையாட்டுகள் படைக்க உள்ளதாக கூறினர்.
அது பொங்கல் வைப்பதில் தொடங்கி , வழுக்கு மரம் ஏறுதல், உறி அடித்தல் , கோலம் போடுதல் , மாலை கட்டுதல், வர்ணம் தீட்டுதல் தோரணம் கட்டுதல் மருதாணி அலங்காரம் , அதிர்ஷ்ட குலுக்கு மற்றும் சைவ உணவு வகைகளும் வழங்கப்படும் அனைவரும் திரண்டு வந்து ஆதரவு தர ஏற்பாட்டுக் குழுவினர் அழைக்கின்றனர்.








