MEDIA STATEMENT

கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி

22 ஜனவரி 2025, 4:13 AM
கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி
கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி
கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி
கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி
கோல லங்காட்டில் 22 பேருக்கு ஐ-சீட் வர்த்தக உபகரணங்கள் விநியோகம்- உதவி பெற்றவர்கள் மாநில அரசுக்கு நன்றி

(ஆர்,ராஜா)

பந்திங், ஜன. 22-  சிலாங்கூர் மாநில அரசின் இந்திய சமூக மற்றும் தொழில்முனைவோர்  மேம்பாட்டு இலாகாவின் (ஐ-சீட்) வாயிலாக கோல லங்காட் மாவட்டத்தைச் சேர்ந்த 22 இந்திய சிறு தொழில்முனைவோருக்கு 170,000 வெள்ளி மதிப்பிலான வர்த்தக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

Penerima Bantuan Indian Selangor Empowerment and Entrepreneurs Development (I-Seed) 2024, R Selvi. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR

தங்களின் வர்த்தகத் தேவைக்கு ஏற்ப இயந்திரப் படகிற்கான இயந்திரம், புல் அரைக்கும் இயந்திரம், அழகு சாதனப் பொருள்கள், வீணை உள்ளிட்ட பொருள்கள் விண்ணப்பதாரர்களுக்கு வழங்கப்பட்டன.

இங்குள்ள பந்திங் சட்டமன்றத் தொகுதி அலுவலகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மனித வளம் மற்றும் வறுமை ஒழிப்புத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினரும் பந்திங் சட்டமன்ற உறுப்பினருமான வீ.பாப்பராய்டு இந்த பொருள்களை சம்பந்தப்பட்டவர்களிடம் ஒப்படைத்தார்.

இத்திட்டத்தின் மூலம் தங்களின் வர்த்தக நடவடிக்கையின் விரிவாக்கத்திற்கு பெரிதும் துணை புரிந்த மாநில அரசுக்கும் ஆட்சிக்குழு உறுப்பினர் வீ.பாப்பராய்டுவுக்கும் உபகரணங்களைப் பெற்றவர்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Penerima Bantuan Indian Selangor Empowerment and Entrepreneurs Development (I-Seed) 2024, S Vinodhkanna. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR

இந்த ஐ-சீட் திட்டத்தின் கீழ் தமக்கு வாகனங்களில் ஏற்பட்டுள்ள பழுதை கண்டறிய உதவும் உபகரணம் வழங்கப்பட்டதாக தஞ்சோங் சிப்பாட்டைச் சேர்ந்த எஸ். வினோத்கண்ணன். கூறினார். கடந்த ஆறு ஆண்டுகளாக வாகன பழுதுபாப்புத் துறையில ஈடுபட்டு வரும் தமக்கு சுமார் 8,000 வெள்ளி மதிப்பிலான இந்த பொருள் கிடைப்பதில் பெரிதும் துணை புரிந்த மாநில அரசு, ஆட்சிக்குழு உறுப்பினர் பாப்பராய்டு, வட்டார இந்திய சமூகத் தலைவர் முரளி ஆகியோருக்கு தாம் நன்றி தெரிவித்துக் கொள்வதாக  அவர் சொன்னார். 

 

மாடு வளர்க்கும் தொழில் ஈடுபட்டுள்ள தமக்கு மாநில அரசின் இந்த ஐ-சீட் திட்டத்தின் கீழ் வாயிலாக புல் அரைக்கும் இயந்திரம் உள்ளிட்ட உபகரணங்கள் தமக்கு வழங்கப்பட்டதாக பந்திங், தாமான் லங்காட் ஜெயாவைச் சேர்ந்த சுந்தர் சந்திரசேகரன் தெரிவித்தார்.

Penerima Bantuan Indian Selangor Empowerment and Entrepreneurs Development (I-Seed) 2024, C Sundar. Foto AHMAD ZAKKI JILAN/MEDIA SELANGOR

ஐ-சீட் மூலம் வழங்கப்பட்ட இந்த உபகரணங்கள் தமது பண்ணைத் தொழிலை விரிவு படுத்த இயலும் என்பதோடு தற்போது ஆறாக இருக்கும் மாடுகளின் எண்ணிக்கையை 100ஆகவும் உயர்த்தும் இலக்கையும் அடைய முடியும் என அவர் நம்பிக்கையுடன் குறிப்பிட்டார்.

மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள தமக்கு இந்த ஐ-சீட் திட்டத்தின் மூலம் மீன்பிடி படகிற்கான இயந்திரம் வழங்கப்பட்டதாக தஞ்சோங் சிப்பாட்டைச் சேர்ந்த கணபதி ராமச்சந்திரன் கூறினார். இதன் மூலம் தனது தொழிலை விரிவுபடுத்திக் கொள்வதற்குரிய வாய்ப்பு கிட்டியுள்ளதாகக் கூறிய அவர், இந்த உபகரணம் தமக்கு கிடைப்பதில் உதவியை அனைவரும் நன்றி தெரிவித்துக் கொள்வதாக  தெரிவித்தார்.

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.