MEDIA STATEMENT

பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர்  ஏற்பாட்டில் பக்தர்கள் ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம்

13 ஜனவரி 2025, 9:00 AM
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர்  ஏற்பாட்டில் பக்தர்கள் ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம்
பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர்  ஏற்பாட்டில் பக்தர்கள் ஆலயங்களுக்கு ஆன்மீகப் பயணம்

சிராஸ், ஜன. 13- பலாக்கோங் சட்டமன்றம் மற்றும் தாமான் ஸ்ரீ சிராஸ் மடாணி சமூக தலைவர் ஏற்பாட்டில் இவ்வட்டார பக்தர்கள் ஜோகூர் பாரு  மற்றும் நெகிரி செம்பிலானில் உள்ள ஆலயங்களுக்கு ஆன்மீக பயணம் மேற்கொண்டனர்.

40 பேர் அடங்கிய இந்த பக்தர்களுக்கான போக்குவரத்து மற்றும் உணவு ஆகியவற்றை பலாக்கோங் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய் ஏற்றுக் கொண்டார்.

இவர்கள் அனைவரும் சனிக்கிழமை இரவு 11.30 மணியளவில் சிலாங்கூர், பலாக்கோங், தாமான் ஸ்ரீ தீமா ஸ்ரீ பாலசுப்பிரமணிய ஆலயத்தில் இருந்து புறப்பட்டனர்.

இந்த பக்தர்கள் அனைவரையும் வெய்ன் ஓங் சுன் வெய் வழியனுப்பி வைத்தார்.

அதே வேளையில், இவர்கள் அனைவருக்கும் இவர் புத்தாண்டு காலண்டர்களை வழங்கினார்.  இவர்கள் நேற்று 5 ஆலயங்களில்  தெய்வீக வழிபாட்டை  மேற்கொண்டனர்.

ஜோகூர் பாரு, தம்போய்,  ஸ்ரீ மகா சிவ முனீஸ்வரர் ஆலயம், அருள்மிகு ஸ்ரீ ராஜ காளியம்மன் கண்ணாடி ஆலயம், குளுவாங் ஆதிசிவ சக்தி கந்தரீசர் ஆலயம், அருள்மிகு ராஜ மாரியம்மன் தேவஸ்தானம் மற்றும் நெகிரி செம்பிலான், உலு சாவா ஸ்ரீ சிவ சங்கர வால்முனி வனமுனி ஆலயம் ஆகியவையே அந்த ஆலயங்கள்.

மேற்கண்ட தெய்வ திருத்தலங்களுக்கான வருகையை மேற்கொண்ட பலாக்கோங் பக்தர்கள் அனைவரும் சட்டமன்ற உறுப்பினர் வெய்ன் ஓங் சுன் வெய்யிற்கு தங்களின் நன்றியைத் தெரிவித்துக் கொண்டனர்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.