MEDIA STATEMENT

சிலாங்கூர் ரக்பி சங்க ஏற்பாட்டில் 33 பள்ளிகளில் ரக்பி பயிற்சி- 3,500 மாணவர்கள் பங்கேற்பு

13 ஜனவரி 2025, 7:08 AM
சிலாங்கூர் ரக்பி சங்க ஏற்பாட்டில் 33 பள்ளிகளில் ரக்பி பயிற்சி- 3,500 மாணவர்கள் பங்கேற்பு

ஷா ஆலம், ஜன. 13- சிலாங்கூர் மாநில ரக்பி சங்கம் (கே.ஆர்.எஸ்.) சைம் டார்பி புரொபெர்ட்டி பெர்ஹாட் நிறுவனத்துடன் இணைந்து தொடக்கப் பள்ளி மாணவர்களுக்கு ரக்பி பயிற்சியை வழங்குகிறது. இந்த பயிற்சியில் மாநிலத்திலுள்ள 33 பள்ளிகள் பங்கேற்கின்றன.

ரக்பி விளையாட்டை மாணவர்கள் மத்தியில் அறிமுகப்படுத்துவது மற்றும் இளம் தலைமுறையினர் மத்தியில் ஆற்றலை வளர்ப்பதற்கு ஏதுவாக ரக்பி குழுக்களை உருவாக்குவது தொடர்பான வழிகாட்டியை பள்ளிகளக்கு வழங்குவது ஆகிய நோக்கங்களின் அடிப்படையில் இந்த திட்டம் அமல்படுத்தப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் லிம் யீ வேய் கூறினார்.

சைம் டார்பி நிறுவனத்தின் நிதியுதவியுடன் நடத்தப்படும் இந்த பயிற்சித் திட்டத்திற்கு சிலாங்கூர் மாநில கல்வி இலாகா ஏற்பாடு ஆதரவை வழங்கியுள்ளது என அவர்  சொன்னார்.

ஒவ்வொரு மாவட்டத்திலும் நடத்தப்படும் இந்த ரக்பி விளையாட்டுப் பயிற்சியின் வாயிலாக சிலாங்கூர் மாநிலத்தில் ரக்பி விளையாட்டின் தரத்தை மேலும் உயர்த்த முடியும் என்பது எனது நம்பிக்கையாகும் என அவர் தெரிவித்தார்.

இந்த பயிற்சி காலத்தில் ரக்பி சங்கப் பயிற்றுநர்கள் சுமார் 3,500 மாணவர்களுக்கு ரக்பி தொடர்பான பயிற்சிகளை வழங்குவர் என்ற அவர் மேலும் குறிப்பிட்டார்.

இது தவிர மாநில கல்வி இலாகாவின் விளையாட்டு தொழில்நுட்ப அதிகாரிகளும் தாங்கள் சார்ந்த மாவட்டங்களில்  மாணவர்களுக்கு பயிற்சிகளை வழங்குவர் என்றார் அவர்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.