MEDIA STATEMENT

வரத்தக வாகனங்களுக்கு எதிராக 22,201 குற்ற அறிக்கைகளை ஜே.பி.ஜே. வெளியிட்டது 

12 ஜனவரி 2025, 4:32 AM
வரத்தக வாகனங்களுக்கு எதிராக 22,201 குற்ற அறிக்கைகளை ஜே.பி.ஜே. வெளியிட்டது 

பட்டர்வெர்த், ஜன. 12- வர்த்தக வாகனங்களுக்கு எதிராக சாலை போக்குவரத்து இலாகா (ஜே.பி.ஜே.)  நாடு முழுவதும் மேற்கொண்ட ஓப் டெக்னிக்கல் அதிரடிச் சோதனை நடவடிக்கையில் 22,201 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன. 

நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்றத் தவறிய வர்த்தக வாகனங்களுக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கும் நோக்கில் ஜே.பி.ஜே. இந்த இயக்கத்தை நாடு தழுவிய அளவில் நடத்தி வருகிறது. 

கடந்தாண்டு டிசம்பர் 25ஆம் தேதி முதல் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சோதனை நடவடிக்கையில் 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 333), 2010 தரைப் போக்குவரத்துச் சட்டம் (சட்டம் 715) மற்றும் விதிமுறைகளின் கீழ் அந்த கன ரக வாகனங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டது என்று போக்குவரத்து அமைச்சின் தலைமைச் செயலாளர் டத்தோ எம். ஜன சந்திரன் கூறினார். 

கடந்த மாதம் 25ஆம் தேதி தொடங்கி நேற்று முன்தினம் வரை 88,034 வர்த்தக வாகனங்கள் சோதனக்கு உட்படுத்தப்பட்ட வேளையில் 22,210 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன. மேலும் 9,661 வாகனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதோடு 77 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன என்று அவர் தெரிவித்தார். 

இந்த சோதனை நடவடிக்கைகளின் போது கிட்டத்தட்ட 7,000 வாகனங்கள் தொழில்நுட்பம் சார்ந்த அதாவதுடயர்கள் தேய்ந்த போன நிலையில காணப்படுவதுநிர்ணயிக்கப்பட்ட விதிகளை டயர்கள் கொண்டிராதது மற்றும் முறையாகப் பராமரிக்கப்படாது உள்ளிட்ட குற்றங்களைக் கொண்டிருந்தது கண்டறியப்பட்டது என்று அவர் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டார். 

நேற்று இங்குள்ள சுங்கை டுவா டோல் சாவடியில் (தெற்கு தடம்மேற்கொள்ளப்பட்ட  ஓப் கெம்புர் டெக்னிக்கல் ஒருங்கிணைந்த சோதனையில் பங்கு கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார். 

 

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.