லாஹ்சா, ஜன. 8- சீனாவின் தென்மேற்கு ஜிசாங் சுயாட்சிப் பகுதியில் உள்ள டிங்ரி மாவட்டத்தில் நேற்று காலை ஏற்பட்ட 6.8 மெக்னிடியூட் அளவிலான நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை நேற்றிரவு 7.00 மணி நிலவரப்படி 126 பேராக உயர்ந்துள்ளது. இந்த பேரிடரில் மேலும் 188 பேர் காயமடைந்துள்ளதாக சின் ஹூவா செய்தி நிறுவனம் தெரிவித்தது.
இந்த பூகம்பத்தைச் தொடர்ந்து பேரிடர் மீட்பு நடவடிக்கையை சீனாவின் பொது பாதுகாப்பு அமைச்சு முடுக்கி விடப் பட்டுள்ளதோடு மீட்பு பணிகளை மேற்கொள்வதற்கும் போக்குவரத்தைக் கண்காணிப்பதற்கும் படையினரை அப்பகுதிக்கு அனுப்பியுள்ளது.
ஷிஸியாங் பகுதியில் பூகம்ப அவசர நிலையை அந்த பிராந்தியத்தின் அவசரகால உத்தரவு மையம் முதலாம் நிலைக்கு அதாவது உயர்ந்த பட்ச அளவுக்கு உயர்த்தியுள்ளது.
பேரிடர் நிகழ்ந்த இடங்களை படம் பிடிப்பதற்காக சீன அரசாங்கம் அப்பகுதிக்கு துணைக் கோள் களை அனுப்பியுள்ளது. பூமியில் கார்பன் சூழியல் முறையை ஆராயும் பணியை மேற்கொண்டுள்ள ஜியோஃபென் துணைக் கோளத் தொடர் உட்பட எட்டு துணைக் கோளங்கள் அங்கு அனுப்பப்பட்டுள்ளதாக அந்நாட்டின் துணைக் கோள செயலி மற்றும் தரவு மையம் கூறியது.
பூகம்பத்தால் பாதிக்கப்பட்ட பகுதிக்கு 3,400 மீட்புப் பணியாளர்களும் 340 மருத்துவ உதவியாளர்களும் அனுப்பப் பட்டுள்ளனர்.
டிங்ரி மாவட்டத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு வானிலை தெளிவாக அதாவது 18 முதல் 14 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது.


