MEDIA STATEMENT

ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23வது மாடியிலிருந்து விழுந்து மாது மரணம்

8 ஜனவரி 2025, 5:49 AM
ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23வது மாடியிலிருந்து விழுந்து மாது மரணம்

சண்டகான், ஜன. 8- இங்குள்ள ஜாலான் புலி சிம் சிம்மில் உள்ள ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின்  23வது மாடியிலிருந்து பெண்மணி ஒருவர் நேற்றிரவு தவறி விழுந்து  உயிரிழந்தார்.

தலை மற்றும் காலில் ஏற்பட்ட  பலத்த காயங்களின் விளைவாக 47 வயதான அந்த உள்நாட்டுப் பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள்  உறுதிப்படுத்தினர்.

இச்சம்பவம் தொடர்பில் இரவு 8.00 மணியளவில்  தனது தரப்புக்கு தகவல் கிடைத்ததாக சண்டகான் மாவட்ட காவல் துறைத் தலைவர்  உதவி ஆணையர் அப்துல் புவாட் அப்துல் மாலேக் கூறினார்

அந்தப் பெண் ஆடம்பர அடுக்குமாடி குடியிருப்பின் 23 வது மாடியிலிருந்து விழுந்தது தொடக்கக்கட்ட விசாரணையில் தெரியவந்தது. அவர் 23வது  மாடியில் மின்தூக்கியிலிருந்து  வெளியேறியது அங்குள்ள கண்காணிப்பு கேமராவில்  பதிவாகியுள்ளது

மேலும், அப்பெண் அந்த  குடியிருப்பில் வசிப்பவர் அல்ல என்பதும் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது என்று அவர் இன்று ஒரு அறிக்கையில் கூறினார்.

இச்சம்பவம்  தொடர்பில் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வரும் நிலையில் இது  திடீர் மரணம் என வகைப்படுத்தப் பட்டுள்ளது.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.