மோட்டார் சைக்கிளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 134,718 குற்ற அறிக்கைகள் வெளியீடு- ஜே.பி.ஜே. தகவல்

1 ஜனவரி 2025, 3:20 AM
மோட்டார் சைக்கிளுக்கு எதிரான சிறப்பு சோதனையில் 134,718 குற்ற அறிக்கைகள் வெளியீடு- ஜே.பி.ஜே. தகவல்

கோலாலம்பூர், ஜன. 1- இவ்வாண்டு நவம்பர் மாதம் தொடங்கி இன்று வரை நாடு முழுவதும் மேற்கொள்ளப்பட்ட மோட்டார் சைக்கிள்களுக்கு எதிரான சிறப்பு சோதனை நடவடிக்கையில் பல்வேறு போக்குவரத்து குற்றங்களுக்காக 134,718 குற்ற அறிக்கைகள் வெளியிடப்பட்டன.

பதிவு செய்யப்பட்ட அதிகமான குற்றங்களில் லைசென்ஸ் இல்லாதது (38,754), சாலை வரி காலாவதியானது (28,897) மற்றும் காப்புறுத் பாதுகாப்பு இல்லாத து (26,095) ஆகியவை விளங்குகின்றன என்று சாலை போக்குவரத்து இலாகாவின் துணைத் தலைமை இயக்குநர் (திட்டமிடல் மற்றும் செயலாக்கம்) டத்தோ ஜஸ்மானி ஷாபாவி கூறினார்.

இவை தவிர எண் பட்டைகள் நிர்ணயிக்கப்பட்ட விதிமுறைகளைக் கொண்டிராதது (7,852), லைசென்ஸ் காவாதியானது (2,842), அந்நிய நாட்டினர் வாகனம் ஓட்டியது (2,750) மற்றும் குறைந்த வயதினர் மோட்டார் சைக்கிள் ஓட்டியது (319) ஆகிய குற்றங்களும் அடங்கும் என அவர் சொன்னார்.

செல்லத்தக்க வானமோட்டும் உரிமம் இன்றி மோட்டார் சைக்கிளை ஓட்டியதற்காக அதன் உரிமையாளருக்கு எதிராக 1987ஆம் ஆண்டு சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 26(1)வது பிரிவின் கீழ் குற்றஞ்சாட்டப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

முறையான லைசென்ஸ் இன்றி இளையோரை மோட்டார் சைக்கிளை ஓட்ட அனுமதித்த குற்றத்திற்காக சாலை போக்குவரத்துச் சட்டத்தின் 39வது பிரிவின் கீழ் அவர்களின் பெற்றோர் மீது நடவடிக்கை எடுக்க முடியும். குற்றம் நிரூபிக்கப்பட்டால்  சம்பந்தப்பட்டவர்களுக்கு இரண்டாயிரம் வெள்ளி வரையிலான அபராதம், அல்லது ஆறு மாதச் சிறைத்தண்டனை அல்லது இரண்டுமே விதிக்க இச்சட்டப் பிரிவு வகை செய்கிறது என்று அவர் கூறினார்.

ஷா ஆலம் நெடுஞ்சாலையின் அவான் பெசார் டோல் சாவடி அருகே நேற்றிரவு மேற்கொள்ளப்பட்ட சிறப்பு அதிரடிச் சோதனையின் போது செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.