MEDIA STATEMENT

நீர் தேக்க குளத்தின் அணையின் சாய்வு மற்றும் தடுப்பு சுவரை நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும் .

31 டிசம்பர் 2024, 5:37 PM
நீர் தேக்க குளத்தின் அணையின் சாய்வு மற்றும் தடுப்பு சுவரை நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஒரு மாதத்தில் நிறைவடையும் .

கோல சிலாங்கூர், ஜனவரி 1: சௌஜானா உத்தாமாவில் உள்ள ஹில் பார்க் குளத்தில் தடுப்பணை மற்றும் தடுப்பு சுவரை (எஃகு பைலிங்) நிலைநிறுத்துவதற்கான பணிகள் ஒரு மாதத்திற்குள் நிறைவடையும் என்று எதிர்பார்க்கப் படுவதாக  உள்கட்டமைப்புக்கு    பொறுப்பான  'ஐ ஆர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

மேம்பாட்டாளரால்  ஒரு குறுகிய கால நடவடிக்கையாக உறுதிப்படுத்தல் மேற்கொள்ளப்படும் என்றும், அச் சம்பவம் மீண்டும் நிகழாமல் தடுக்க குளப் பகுதியை இரண்டு மீட்டருக்கு மேல் ஆழப் படுத்தாது என்றும் கூறினார்.

"மேம்பாடு இன்னும் முழுமையாக முடிக்கப் படாததாலும், நீர்ப்பாசன மற்றும் வடிகால் துறையிடம் ஒப்படைக்கப் படாததாலும் அனைத்து நிலைப்படுத்தல் பணிகளின் செலவையும் மேம்பாட்டாளர் நிறுவனம் ஏற்றுக்கொள்ளும் என்றார் அவர்.

"அதிக மழைக்கு இடமளிக்கும் வகையில் வடிகால்களை மேம்படுத்துவதே நீண்டகால நடவடிக்கையாகும்". இந்த திட்டத்தை மாநில அரசு ஆய்வு செய்யும் "என்று அவர் இன்று இங்குள்ள நீர் தடுப்பு குல தளத்திற்கு விஜயம் செய்த பின்னர் செய்தியாளர்களிடம் கூறினார்.

இதற்கிடையில்,  ஆரம்ப காரணிகளில்  ஒன்றாக அணையின் தடுப்புகளில் பயன்படுத்தப்பட்ட இரப்பர் வடிவமைப்பில் ஏற்பட்ட பலவீனம் சரிவுக்கு காரணம் என்றும் அதனால்  தாமான் ஸ்ரீ ஆலமில் உள்ள 200 குடியிருப்புகள் வெள்ளத்தால் பாதித்தது என்று ஐ ஆர் டத்தோ இஷாம் ஹாஷிம் தெரிவித்தார்.

"இந்த குளம் 2015 இல் முடிக்கப்பட்டது மற்றும் 0.2 மீட்டர் உயரத்திற்கு வடிவமைக்கப்பட்டது, தண்ணீர் 0.3 மீட்டர் வரை உயர்ந்ததால் சரிவு ஏற்பட்டது".

" ஹில் பார்க்கில் பயன்படுத்துவதற்காக கட்டப்பட்ட குளத்தின் நீர் தாழ்வான பகுதி நோக்கி   வெளியேறியதால்   சௌஜானா உத்தாமாவில் உள்ள வீடுகளை பாதித்துள்ளது" என்று அவர் விளக்கினார்.

நேற்று மறுநாள், வீட்டு பகுதிக்கு அருகிலுள்ள தக்கவைப்பு குளத்தின் அணை உடைந்ததால் அந்த இடம் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.