MEDIA STATEMENT

தென் கொரிய விமான விபத்து- இருவர் தவிர இதர அனைவரும் பலியாகியிருக்கலாம் என அச்சம்

29 டிசம்பர் 2024, 9:13 AM
தென் கொரிய விமான விபத்து- இருவர் தவிர இதர அனைவரும் பலியாகியிருக்கலாம் என அச்சம்

முவான் (தென் கொரியா), டிச 29-  தென் கொரியாவின் தென்மேற்குப் பகுதியில் உள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் 181 பேருடன் தரையிறங்கிய விமானம் நிறுத்தும்  விசையில்  ஏற்பட்ட கோளாறு  காரணமாக  மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில்  இரு பயணிகளைத்  தவிர மற்ற அனைவரும் இறந்துவிட்டதாக நம்பப்படுகிறது என அதிகாரிகள் தெரிவித்ததாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்தது.

இன்று காலை 9.07 மணியளவில் அந்த ஜெஜு ஏர் விமானம் சியோலில் இருந்து தென்மேற்கே 288 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ள முவான் அனைத்துலக விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்க முயன்றது. எனினும்,  அந்த முயற்சி பலனளிக்காத நிலையில் விமான நிலைய  வேலியில் அது மோதி விபத்துக்குள்ளானது

இந்த விபத்தில்  இதுவரை 85 பேர் உயிரிழந்தது  உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் பாதிக்கப்பட்டவர்களின் உடல்களை அகற்றும் பணி தற்போது மேற்கொள்ளப்படுகிறது.

இந்த விபத்தில் உயிர்தப்பிய இரு பெண்கள் அதாவது  ஒரு பயணி மற்றும் ஒரு பணியாளர்  தற்போது மோக்போவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

பேங்காக்கில் இருந்து வந்த அந்த விமானத்தில் 6 பணியாளர்கள் உட்பட 181 பேர் இருந்தனர்,

விமானம் தரையிறங்கும் கியர் இல்லாமல் தரையிறங்க முயற்சிக்கும்  காட்சியை உள்ளூர் தொலைக்காட்சி நிறுவனம் ஒளிபரப்பியது.

விமானம் தரையில் சறுக்கிச் சென்று  கான்கிரீட் சுவரில் மோதி வெடித்து தீப்பிடித்தது. வெடிப்புச் சம்பவம் காரணமாக அந்த  விமானம்    கிட்டத்தட்ட  முற்றாக அழிந்தது.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.