MEDIA STATEMENT

பத்து தீகா தொகுதியில் நாளை இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

28 டிசம்பர் 2024, 9:44 AM
பத்து தீகா தொகுதியில் நாளை இலவச மருத்துவப் பரிசோதனை முகாம்

ஷா ஆலம்,  டிச. 28- பத்து தீகா மாநில சட்டமன்றத் தொகுதி ஏற்பாட்டில்  ஷா ஆலம், செக்சன் 24, டேவான் பெரிங்கினில் நாளை நடைபெறும் ரஹ்மா மருத்துவ விழா 7.0 நிகழ்வில்   கலந்து கொள்ள பொதுமக்கள் அழைக்கப்படுகிறார்கள்.

காலை 8.00 மணி முதல் பிற்பகல் 3.00 மணி வரை நடைபெறும் இந்த இலவச மருத்துவ பரிசோதனை நிகழ்வில்  பல்வேறு சுவாரஸ்யமான நடவடிக்கைகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக  தொகுதி சட்டமன்ற  உறுப்பினர்  டேனியல் அல்-ரஷிட் ஹரோன் தெரிவித்தார்.

நாளை நடைபெறும்  ரஹ்மா சுகாதார கார்னிவெல்  7.0 நிகழ்வில்  இணைவோம்.  இருதய பரிசோதனை மற்றும் மார்பக புற்று நோய் பரிசோதனை உட்பட பல்வேறு மருத்துவ சோதனை  நடவடிக்கைகள் நடைபெறும்.

நீங்களும் உங்கள் குடும்பத்தினரும் இலவச உடல்நலப் பரிசோதனை செய்து உங்கள் ஆரோக்கியத்தை  கவனித்துக் கொள்ள இது சிறந்த வாய்ப்பு. இந்த வாய்ப்பைத் தவறவிடாதீர்கள், உங்கள் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் நண்பர்களையும் அழைத்து வாருங்கள். சுகாதாரப் பாதுகாப்பின் நன்மைகளை அனைவரும் பெறுவோம் என்று அவர் தனது முகநூல்  பதிவில் கூறினார்.

பொதுமக்கள்  sehati.perkeso.gov.my/check மற்றும் sehati.pekab40.com.my/semakan- kelayakayan  என்ற இணைப்பினா மூலம் தங்கள் தகுதியை  இங்கு  சரிபார்க்கலாம்

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.