ஷா ஆலம், டிச 28- கோலா லங்காட் நகராண்மைக் கழகம், வாகன நிறுத்துமிடக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை அடுத்தாண்டு ஜனவரி 1 முதல் மார்ச் 30 வரை 15.00 வெள்ளியாகக் குறைத்துள்ளது.
நீதிமன்ற நடவடிக்கை எடுக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக 2024 மற்றும் அதற்கு முந்தைய ஆண்டிற்கான அனைத்து வகையான குற்றங்களுக்கும் இந்த சலுகை வழங்கப்படுகிறது என்று நகராண்மைக் கழகம் கூறியது.
ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலி மூலம் அல்லது நகராண்மைக் கழக முகப்பிடங்களில் அபராதத் தொகையைச் செலுத்தலாம்.
ஸ்மார்ட் சிலாங்கூர் பார்க்கிங் செயலியை கூகுள் பிளேய் அல்லது ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று நகராண்மைக் கழகம் தனது முகநூல் பதிவில் தெரிவித்தது.
மேலும் தகவல்களைப் பெற விரும்புவோர் நகராண்மைக் கழகத்தின் போக்குவரத்து வார்டன் பிரிவு அல்லது அமலாக்கத் துறையை 03-31811809 அல்லது 012-300 4897 (புலனம்) என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.








