ஷா ஆலம், டிச. 25 - தொழிலியல்துறை, வணிகம் மற்றும் விளம்பர லைசென்ஸ்களை புதுப்பிப்பதற்கான கால அவகாசத்தை கிள்ளான் அரச மாநகர் மன்றம் அடுத்தாண்டு ஜனவரி 31ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.
இந்த காலக்கெடு நீட்டிப்பு காலத்தில் வர்தாதகர்களுக்கு அபராதம் ஏதும் விதிக்கப்படாது என்று கிள்ளான் அரச மாநகர் மன்ற டத்தோ பண்டார் டத்தோ அப்துல் ஹமிட் ஹூசேன் கூறினார்.
வர்த்தக உரமங்களைப் புதுப்பிக்கும் பணிகளை மைலைசென்ஸ் சிஸ்டம் (MyLesen System) மூலம் மேற்கொள்ளலாம் என்று அவர் தெரிவித்தார்.
மைலைசென்ஸ் சிஸ்டம் முறையைப் பயன்படுத்துவதற்கான உதவி மற்றும் ஆலோசனைகளை வழங்குவதற்காக மாநகர் மன்றம் புதுப்பித்தல் முகப்பிடஙகளைத் திறந்துள்ளது.
இந்த முகப்பிடங்கள் டேவான் ஹம்சாவில் டிசம்பர் 23 தொடங்கி ஜனவரி 31 வரை திங்கள் முதல் வெள்ளி வரை காலை 8.30 முதல் மாலை 4.30 வரை திறந்திருக்கும் என்று நேற்று மாநகர் மற்ற உறுப்பினர்களுடான சந்திப்பின் போது அவர் கூறினார்.
உரிமம் வைத்திருப்பவர்கள் கடைசி நிமிட நெரிசலைத் தவிர்ப்பதற்காக உடனடியாக தங்கள் உரிமங்களை புதுப்பிக்குமாறு அவர் நினைவுபடுத்தினார்.
இதனிடையே, முறிந்து விழுந்த மரங்கள், வெள்ளம் அல்லது திறந்தவெளி தீயிடல் உள்ளிட்ட அவசர நிலைகள் தொடர்பில் புகாரளிக்க விரும்பும் பொதுமக்கள் மாநகர் மன்றத்தின் 017-8747 363 என்ற வாட்ஸ்அப் மூலம் தொடர்பு கொள்ளலாம் என்று அவர் கூறினார்.



