MEDIA STATEMENT

ஜன.1ஆம் தேதி பிரிக்ஸ் பங்காளி நாடாக ஆகிறது மலேசியா

24 டிசம்பர் 2024, 3:28 AM
ஜன.1ஆம் தேதி பிரிக்ஸ் பங்காளி நாடாக ஆகிறது மலேசியா

மாஸ்கோ, டிச. 23 - மலேசியா, பெலாருஸ், ​​பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், தாய்லாந்து, கியூபா, உகாண்டா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் ஜனவரி 1ஆம் தேதி முதல் அதிகாரப்பூர்வமாக பிரிக்ஸ் பங்காளிகளாக இணையும்  என்று கிரெம்ளின் உதவியாளர் யூரி உஷாகோவ் நேற்று தெரிவித்தார்.

பிரிக்ஸ் அமைப்பில்  சேர 35 விண்ணப்பங்கள் கசானில் நடைபெற்ற  உச்சநிலை மாநாட்டிற்கு   முன் ஏதோ ஒரு நிபந்தனையில் எங்களுக்கு வந்தன என்று அவர் கூறினார்.

சந்தேகத்திற்கு இடமின்றி, அந்த உச்சநிலை மாநாட்டில் எடுக்கப்பட்ட மிக முக்கியமான முடிவுகளில் ஒன்று பிரிக்ஸ்  பங்காளி நாடுகளை வகைப் படுத்தியது  மற்றும் 13 நாடுகளின் பட்டியல் தொடர்பான ஒப்பந்தம் ஆகும். சம்பந்தப்பட்ட  நாடுகளுக்கு அப்பரிந்துரைகள்  அனுப்பப்பட்டன.

இன்றுவரை, பெலாருஸ், ​​பொலிவியா, இந்தோனேசியா, கஜகஸ்தான், கஜகஸ்தான், கியூபா, மலேசியா, தாய்லாந்து, உகாண்டா, மலேசியா மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகியவை பிரிக்ஸ் பங்காளி நாடுகளாக ஆவதற்குத் தங்கள் தயார்நிலையை உறுதிப்படுத்தியுள்ளன என்று உஷாகோவ் ஒரு மாநாட்டில் கூறினார்.

அழைப்பு அனுப்பப்பட்ட எஞ்சிய நான்கு நாடுகளிலிருந்தும் எதிர்காலத்தில் பதில்களைப் பெறுவோம் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம் அவர் தெரிவித்தார்.

இருபதுக்கும் மேற்பட்ட நாடுகள் பிரிக்ஸ் அமைப்பில்  சேர  ஆர்வம் காட்டுகின்றன. ஒருமித்த கருத்து கொண்ட நாடுகளின் நுழைவுக்காக சங்கத்தின் கதவுகள் திறந்தே உள்ளன உஷாகோவ் மேலும் கூறினார்.

- பெர்னாமா

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.