சுபாங் ஜெயா, டிசம்பர் 21: எதிர்காலத்தில் பொதுத் தேர்தலில் (ஜிஇ) வெற்றி பெறுவதில் மடாணி அரசாங்கத்திற்கு ஒரு சாதகமான சூழ்நிலை இருப்பதாக டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நம்பிக்கை தெரிவித்தார்.
பொருளாதார மேலாண்மை அம்சங்களுக்கு முன்னுரிமை அளிக்கும் தனது நிர்வாகத்தின் கட்டமைப்பை அடிப்படையாகக் கொண்டது இந்த நம்பிக்கை என்று பிரதமர் கூறினார்.
இப்போதைய சூழ்நிலையில் பொதுத் தேர்தல் நடந்தினால், நாம் வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை அதிகமாக இருப்பதற்கு "தற்போதைய பொருளாதார சூழ்நிலையின் நிகழ்ச்சி நிரலை வைத்து கூறினார். இந்த ஏற்றத்திற்கு உயர்மட்ட உழைப்பும், முன் முயற்சிகள் அதிகம் தேவை" என்று அவர் இன்று செய்தியாளர் கூட்டத்தில் கூறினார்.
அதே வேளையில் , அமைச்சரவை உறுப்பினர்கள் உட்பட மடாணி அரசாங்கத்தின் செயல்திறனை இன்னும் மேம்படுத்த முடியும் என்று தனது தரப்பு நம்புகிறது என்றும் அன்வார் கூறினார்.
தனது அமைச்சர்கள் சிலரின் செயல்திறன் சிறந்தது என்பதை அவர் ஒப்புக் கொண்டார், ஆனால் சிலர் இன்னும் மிதமான மட்டத்தில் இருக்கின்றனர்.
"நான் திருப்திக்காக என்னால் முடிந்தவரை முயற்சி செய்கிறேன், இருப்பினும், முன்னேற்றத்திற்கு இன்னும் இடம் உள்ளது. அமைச்சர்களின் சேவை மீது நான் திருப்தியாக இருக்கிறேனா என்றால், சிலர் சிறப்பாகவும், சிலர் சராசரியாக, செயல்படுவதாக அவர் கூறினார்.
மேலும், அமைச்சரவை உறுப்பினர்களிடையே அதிகார துஷ்பிரயோகம் தொடர்பான எந்தவொரு வழக்கிலும் சமரசம் செய்ய மாட்டேன் என்று பிரதமர் வலியுறுத்தினார்.
இரண்டாவது ஆண்டுக்குள் நுழைந்துள்ள மடாணி அரசின் நிர்வாகத்தில், திட்டங்களுக்கான நேரடி பேச்சுவார்த்தைகள் அல்லது 'கமிஷன் வழங்கும் நடைமுறைகளுக்கு இடமில்லை. அவை அனுமதிக்கப்படாது. அதெல்லாம் பழைய நடைமுறைகள் என்று அவர் கூறினார்.
"இது அமைச்சர்களுக்கு மட்டுமல்ல, அதிகாரிகளைப் பற்றியதும் மற்றும் அதற்குக் கீழே, ஆளுகை பொறுப்புகளுக்கும் பொருந்தும். விவேகமான மேலாண்மை குறித்த பிரச்சனையில் சில பழைய வழக்குகள் தீர்க்கப்படலாம், சில இன்னும் நிலுவையில் உள்ளன".
"இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, பிரதமர் தனிப்பட்ட மற்றும் குடும்ப நலன்களுக்காக நிதி ஒதுக்கியதாக ஒரு புகார் இருந்தது".
."பில்லியன் டாலர் நிறுவனங்களின் நலன்களைக் கட்டுப்படுத்தவும் மேம்படுத்தவும் தேவைப்பட்டால், நாங்கள் நடவடிக்கையை எடுப்போம்" என்றும் அவர் கூறினார்.
சில வழக்குகளில் அமலாக்கத்தின் அம்சங்கள் ஓரளவு மெதுவாக இருப்பதை ஒப்புக் கொண்டாலும், சட்ட செயல்முறையை தனது தரப்பு இன்னும் மதிக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.
சில வழக்கு தாமதங்கள் தனிப்பட்ட முறையில் தனக்கு உடன் பாடற்றதாக இருந்தபோதிலும், நீதித்துறை சுதந்திரமாக இருக்க அதை அனுமதித்ததாகவும் அவர் கூறினார்.
"நாடாளுமன்றத்தில் ஊழலை உரத்த குரலில் ஆதரிக்கும் ஒரு அரசியல் பிரமுகரை நான் விசித்திரமாக காண்கிறேன், ஏனென்றால் அவர் வயதானவர், அவர் மீது பழைய வழக்கு உண்டு, என்னைப் பொறுத்தவரை, அமலாக்கம் மிகவும் மெதுவாக உள்ளது, நானும் கூட பொறுமை இழந்தேன், ஏன் இவ்வளவு நேரம் எடுக்கிறது என்று".
"ஆனால் சட்ட செயல்முறையை நாம் மதிக்க வேண்டும்; நீதித்துறை சுயாதீனமானது, அது சுதந்திரமானது என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோமா அல்லது உடன்படவில்லையா என்பது மற்றொரு விஷயம்". நான் எல்லாவற்றையும் ஏற்றுக்கொண்டு மதிக்க வேண்டும் என்பது விதி ", என்று அவர் கூறினார்.
இதற்கு முன்பு மடாணி அரசைப் பற்றி பல அரசு சாரா அமைப்புகள் (என்ஜிஓ) செய்த மதிப்பீடுகள் குறித்து, பிரதமர் தனது கருத்தில், அவை மதிபீடுகளில் எடுத்துக்கொண்ட விஷயங்கள் மற்றும் செயல்திறன் விஷயங்கள் மிகவும் குறைவாகவே உள்ளதாக கூறினார்.
தூய்மையான மற்றும் நியாயமான தேர்தல்களுக்கான அமைப்பு , 'பெர்சே' நடத்திய மதிப்பீட்டை ஒரு எடுத்துக்காட்டாக கூறினார். நிதி அமைச்சராகவும் இருக்கும் அன்வார், ஊழல், ஆளுகை மற்றும் பொருளாதார மேலாண்மை ஆகியவற்றின் மிக முக்கியமான அம்சங்களை அவர்களின் மதிப்பீட்டில் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறினார்.
நமது சீர்திருத்த நிகழ்ச்சி நிரலை ஒன்று அல்லது இரண்டு ஆண்டுகளில் செயல்படுத்த முடியாது என்றும் பிரதமர் கூறினார், ஆனால் சட்டத்துறை தலைவருக்கும் அரசு வழக்கறிஞருக்கும் இடையிலான அதிகாரங்களைப் பிரிப்பது உட்பட பல அம்சங்களில் அரசாங்கம் கவனம் செலுத்தி வருகிறது.
நேற்றைய அமைச்சரவைக் கூட்டத்தின் அடிப்படையில், சில வழக்குகளைக் கையாள்வதில் முன்னேற்றங்கள் உட்பட பல யோசனைகளை அமைச்சரவையில் அமைச்சர்கள் வெளிப்படுத்தியதாக பிரதமர் குறிப்பிட்டார்.


