MEDIA STATEMENT

போதைப் பொருளை வைத்திருந்ததாக  நகைச்சுவை நடிகர் அலோங் சாம் மீது குற்றச்சாட்டு

20 டிசம்பர் 2024, 10:22 AM
போதைப் பொருளை வைத்திருந்ததாக  நகைச்சுவை நடிகர் அலோங் சாம் மீது குற்றச்சாட்டு

சிப்பாங், டிச 20-  கஞ்சாபோதைப் பொருளை  வைத்திருந்ததாக  நகைச்சுவை   நடிகரான அலோங் சாம் என்று அழைக்கப்படும் முகமது நிஜாமுடின் அகமது மீது   இன்று இங்குள்ள  செஷன்ஸ் நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது.

தனக்கு எதிரான குற்றச்சாட்டை  ராஜா லாவாக் ரியாலிட்டி நிகழ்ச்சியின் முன்னாள் பங்கேற்பாளரான 41 வயது ஆலோங் சாம் மறுத்து விசாரணை கோரினார்.

.

கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி பிற்பகல் 3.10 மணிக்கு சைபர்ஜெயாவில் உள்ள தனது வீட்டில் 58.23 கிராம்  எடையுள்ள கஞ்சா என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் வைத்திருந்ததாக  அவர் மீது குற்றஞ்சாட்டப்பட்டது

நான்கு முதல் 13 வயதுக்குட்பட்ட நான்கு குழந்தைகளுக்குத் தந்தையான அவர் 1952 ஆம் ஆண்டு அபாயகர  போதைப்பொருள் சட்டத்தின்  39ஏ (2) பிரிவின் கீழ் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

இச்சட்டப்  பிரிவின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால் ஆயுள் தண்டனை ஐந்து ஆண்டுகளுக்கு குறையாத சிறைத்தண்டனை மற்றும் குறைந்தது 10 பிரம்படிகள் வழங்கப்படும்.

இந்த வழக்கை துணை அரசு வழக்கறிஞர் அகமது சுஹைனி மாமுட்  அமீன் நடத்தும் வேளையில்  குற்றம் சாட்டப்பட்டவர் சார்பில் வழக்கறிஞர் முகமது ஃபாட்லி ஹாஷிம் ஆஜரானார்.

முகமது நிஜாமுடினை ஜாமீனில் விடுவிக்க நீதிபதி அகமது ஃபுவாட் ஓத்மான் அனுமதி வழங்கினார். இந்த வழக்கு  விசாரணையை நீதிபதி ஜனவரி 27 ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தார்.

இதற்கிடையில், அதே இடம், அதே நேரம் மற்றும் அதே தேதியில் 2.07 கிராம் கஞ்சாவை வைத்திருந்ததாக மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில்   கொண்டு வரப்பட்ட குற்றச்சாட்டை  முகமது நிஜாமுடின் மறுத்து விசாரணை கோரினார்.

குற்றம் நிரூபிக்கப்பட்டால்  20,000  வெள்ளி வரை அபராதம் அல்லது  ஐந்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்க வகை செய்யும்

1952 ஆம் ஆண்டின் அபாயகர போதைப்பொருள் சட்டத்தின் 6வது பிரிவின் கீழ் அவர் குற்றச்சாட்டை எதிர்நோக்கியுள்ளார்.

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
MidRec
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.