MEDIA STATEMENT

சீபில்டு தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்

20 டிசம்பர் 2024, 8:18 AM
சீபில்டு தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்
சீபில்டு தமிழ்ப்பள்ளி விளையாட்டுப் போட்டியை சட்டமன்ற உறுப்பினர் பிரகாஷ் தொடக்கி வைத்தார்

(ஆர்.ராஜா)

ஷா ஆலம், டிச. 20-  சீபில்டு தோட்டத் தமிழ்ப்பள்ளியின் 46 -ஆவது  விளையாட்டுப் போட்டி கடந்த டிசம்பர் 15ஆம் தேதி  ஞாயிற்றுக்கிழமை  பள்ளித்திடலில் வெகு  சிறப்பாக நடைபெற்றது.

பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்க ஒத்துழைப்போடு நடைபெற்ற இந்த விளையாட்டுப் போட்டியை  கோத்தா  கெமுனிங் சட்ட மன்ற உறுப்பினர்  பிரகாஷ் சம்புநாதன் அதிகாரப்பூர்வமாக துவக்கி வைத்தார்.

இந்நிகழ்வில் பள்ளித் தலைமையாசிரியர், துணைத் தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள், சிறப்பு பிரமுகர்கள், பெற்றோர் ஆசிரியர் சங்க உறுப்பினர்கள், பள்ளி பணியாளர்கள், முன்னாள் மாணவர்கள், கவுன்சிலர் தர்மிஸி, கோத்தா கெமுனிங் தொகுதி   இந்திய சமூகத் தலைவர் கோபி உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

சிலாங்கூர் மாநில பாலர் பள்ளி மற்றும் தமிழ் பள்ளிகளின் உதவி இயக்குனர்  மணிசேகர் நிறையுரை ஆற்றி விளையாட்டுப் போட்டியை நிறைவு செய்தார்.

வகைselangor

உங்கள் கருத்து என்ன?

அண்மைய செய்திகள்
Media Selangor
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.