ஷா ஆலம், டிச 17: எம்பிஏஜே வணிக உரிமம் புதுப்பித்தல் மினி கார்னிவல் 2025 யை நாளை தொடங்கி இரண்டு நாட்களுக்கு அம்பாங் ஜெயா நகராண்மை கழகம் (எம்பிஏஜே)ஏற்பாடு செய்துள்ளது.
மெனாரா எம்பிஏஜே, லெவல் 4 கேலரியில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை நடைபெறும் இந்நிகழ்வில் பல்வேறு சுவாரசியமான நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக பிபிடி தெரிவித்துள்ளது.
அதில் வணிகம் மற்றும் சுகாதாரம் பற்றிய விளக்கங்கள், யாயாசான் ஹிஜ்ரா சிலாங்கூர் மற்றும் பிளாட்ஃபார்ம் சிலாங்கூர் உள்ளிட்ட பல்வேறு நிறுவனங்களின் கண்காட்சிகள் உட்பட எச்ஐவி விழிப்புணர்வு விளக்கங்கள் ஆகியவை அடங்கும்
"எனவே, பொதுமக்கள், குறிப்பாக எம்பிஏஜே நிர்வாகப் பகுதியிலுள்ள வணிக வளாகங்கள் நடத்துவோர் மற்றும் குறுந்தொழில் முனைவோர், இந்த மினி கார்னிவலில் கலந்து கொண்டு டிசம்பர் 31 ஆம் தேதிக்கு முன் உடனடியாக தங்கள் உரிமங்களை புதுப்பிக்க அழைக்கப்படுகிறார்கள்" என்று எம்பிஏஜே தெரிவித்துள்ளது.
ஏதேனும் கேள்விகள் அல்லது கூடுதல் தகவலுக்கு, எம்பிஏஜே உரிமம் மற்றும் தொழில் முனைவோர் மேம் பாட்டுத் துறையை 03-4285 7344/ 7170 என்ற எண்ணில்








