ஷா ஆலம், டிச 16- சிலாங்கூர் மாநில விவசாய மேம் பாட்டுக் கழகத்தின் (பி.கே.பி.எஸ்.) ஏற்பாட்டிலான ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை இன்று மேலும் நான்கு இடங்களில் நடைபெறவுள்ளது.
அத்தியாவசிய சமையல் பொருட்கள் மலிவான விலையில் வாங்குவதற்குரிய வாய்ப்பை வழங்கும் இந்த ரஹ்மா விற்பனை இன்று காலை 10.00 மணி தொடங்கி டெங்கில், செந்தோசா, ஜெரம், தஞ்சோங் சிப்பாட் ஆகிய இடங்களில் நடைபெறவிருக்கிறது. மலிவு விற்பனை நடைபெறும் இடங்களின் பட்டியல் கீழே விளக்கப்படத்தில் இடம் பெற்றுள்ளது. 
இந்த மலிவு விற்பனையில் ஒரு கோழி 10.00 வெள்ளிக்கும், ஒரு தட்டு பி கிரேட் முட்டை 10.00 வெள்ளிக்கும், இறைச்சி ஒரு பாக்கெட் 10.00 வெள்ளிக்கும், கெம்போங் மீன் ஒரு பாக்கெட் 6.00 வெள்ளிக்கும், 5 கிலோ சமையல் எண்ணெய் 25.00 வெள்ளிக்கும், 5 கிலோ அரிசி 13.00 வெள்ளிக்கும் விற்கப்படுகிறது.
இந்த மலிவு விற்பனைத் திட்டத்திற்கு மாநில அரசு இதுவரை நான்கு கோடி வெள்ளியை உதவித் தொகையாக வழங்கியுள்ளது. மாநிலம் முழுவதும் சுமார் மூவாயிரம் இடங்களில் நடைபெற்ற இந்த மலிவு விற்பனைகளின் வாயிலாக இதுவரை ஐம்பது லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
ஏஹ்சான் ரஹ்மா மலிவு விற்பனை தொடர்பான விபரங்களை பி.கே.பி.எஸ். அகப்பக்கம் மூலமாகவும் போஸ்டரில் இடம் பெற்றுள்ள கியூ.ஆர். குறியீட்டை ஸ்கேன் செய்வதன் வாயிலாகவும் அல்லது http://linktr.ee/myPKPS என்ற அகப்பக்கத்தின் மூலமாகவும் அறிந்து கொள்ளலாம்.








