ஈப்போ, டிச.15- சித்தியவான், கம்போங் பெர்மாத்தாங்கில் உள்ள ஒரு சூராவ் ஒன்றின் பின்புற புதரில் புதிதாகப் பிறந்த ஆண் குழந்தை துணியால் சுற்றப்பட்ட நிலையில் நேற்று கண்டெடுக்கப்பட்டது.
அக்குழந்தை கண்டுபிடிக்கப்பட்டது தொடர்பில் நேற்று மாலை 6.54 மணிக்கு தமது தரப்புக்கு தகவல் கிடைத்தது என்று மஞ்சோங் மாவட்ட காவல்துறைத் தலைவர் ஏசிபி ஹஸ்புல்லா அப்துல் ரஹ்மான் தெரிவித்தார்.
அழுகை சத்தத்தைக் கேட்ட சூராவ்வை சுத்தம் செய்ய வந்த செயலவை உறுப்பினர்களில் ஒருவர் அக்குழந்தையை கண்டுபிடித்தார் என்று அவர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்தார்.
குழந்தை மேல் சிகிச்சைக்காக ஸ்ரீ மஞ்சோங் மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டதாகக் கூறிய அவர், குற்றவியல் சட்டத்தின் பிரிவு 317 இன் கீழ் இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருவதாகக் கூறினார்.
குழந்தையின் தாயைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகவும் இது குறித்து தகவல் தெரிந்தவர்கள் விசாரணை அதிகாரி இன்ஸ்பெக்டர் நூர் முனாவரா அகமதுவை 011-1624 0391 என்ற எண்ணிலோ அல்லது மஞ்சோங் மாவட்ட காவல்துறை தலைமையக செயல்பாட்டு அறையின் 05-688 6222 மற்றும் வாட்ஸ்அப் ஹாட்லைன் 014-6582 800082 800082 80082 800082 800082 800082 800082 என்ற எண்களில் தொடர்பு கொள்ளும்படி கேட்டுக் கொண்டார்.








