MEDIA STATEMENT

உரிய அனுமதியின்றி மறுசுழற்சி ஆலை நிர்மாணிப்பு- நிறுவனத்திற்கு வெ.75,000 அபராதம்

9 டிசம்பர் 2024, 5:52 AM
உரிய அனுமதியின்றி மறுசுழற்சி ஆலை நிர்மாணிப்பு- நிறுவனத்திற்கு வெ.75,000 அபராதம்

சுங்கை பட்டாணி, டிச. 9- சுற்றுச்சூழல் துறையின் சுற்றுச் சூழல்

விளைவுகள் மீதான மதிப்பீட்டு அறிக்கையின் (இ.ஐ.ஏ.) அங்கீகாரத்தைப்

பெறாமல் திடக்கழவு மறுசுழற்றி ஆலையை நிறுவிய குற்றத்தை ஒப்புக்

கொண்ட நிறுவனத்திற்கு இங்குள்ள செஷன்ஸ் நீதிமன்றம் 75,000 வெள்ளி

அபராதம் விதித்தது.

கிரேய் மேட்டர் பிளாஸ்டிக் இண்டஸ்ட்ரிஸ் சென். பெர்ஹாட்

நிறுவனத்திற்கு எதிராக சுமத்தப்பட்ட இக்குற்றச்சாட்டை அந்நிறுவனத்தின்

நிர்வாகி முகமது ஹஸ்னுள் ஹபிஷ் ரோஸ்லான் ஒப்புக் கொண்டதைத்

தொடர்ந்து இந்த தீர்ப்பை நீதிமன்றம் வழங்கியது.

சுற்றுச் சூழல் துறையின் தலைமை இயக்குநரின் அனுமதியைப் பெறாமல்

திடக்கழவு மறுசுழற்சி ஆலையை நிறுவியதற்காக 2015ஆம் ஆண்டு சற்றுச்

சூழல் தர ஆணையின் முதலாவது ஆணையின் 14(பி)(11) பிரிவை

மீறிய குற்றச்சாட்டை  அந்நிறுவனம் எதிர்நோக்கியிருந்தது.

கடந்த ஜூலை மாதம் 3ஆம் தேதி காலை 10.40 மற்றும் பிற்பகல் 2.30

மணிக்கும் இடையே தாமான் ரியா ஜெயா, எல்.பி.கே. தொழில்பேட்டைப்

பகுதியில் உள்ள கிரேய் மேட்டர் இண்டஸ்ட்ரிஸ் சென். பெர்ஹாட்

நிறுவனத்தின் இக்குற்றத்தை புரிந்ததாக குற்றப்பத்திரிகையில்

கூறப்பட்டுள்ளது.

குற்றம் நிரூபிக்கப்படால் 500,000 வெள்ளி வரையிலான அபராதம், கூடுதல்

பட்சம் ஐந்தாண்டுச் சிறை அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும்

1974ஆம் ஆண்டு சுற்றுச் சூழல் தரச் சட்டத்தின் 34ஏ(6) பிரிவின் கீழ் இந்த

வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அரசுத் தரப்பில் சுற்றுச்சூழல் துறையின் வழக்கறிஞர் முனாபி மாட் ரவுஸ்

இந்த வழக்கை நடத்திய வேளையில் அந்நிறுவனத்தின் சார்பில்

வழக்கறிஞர் அகமது முஸ்தாகின் முகமது ஆஜரானார்.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.