MEDIA STATEMENT

சிரிய கிளர்ச்சியாளர்கள் ஆசாட் ஆட்சியை வீழ்த்தினர்- அதிபர் நாட்டிலிருந்து வெளியேறிதாக ரஷ்யா தகவல்

9 டிசம்பர் 2024, 2:34 AM
சிரிய கிளர்ச்சியாளர்கள் ஆசாட் ஆட்சியை வீழ்த்தினர்- அதிபர் நாட்டிலிருந்து வெளியேறிதாக ரஷ்யா தகவல்

அம்மான்/கெய்ரோ, டிச 9 - டமாஸ்கஸ் நகரை நேற்று தங்கள் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தப் பின்னர் அதிபர் பாஷிர் அல்-ஆசாட் பதவியிலிருந்து அகற்றப்பட்டதாக சிரிய நா ட்டு கிளச்சியாளர்கள் அறித்தனர். இந்த புரட்சியின் காரணமாக பல ஆண்டுகளாக ஆசாட்  குடும்பத்தின் பிடியில் இருந்த ஆட்சி முடிவுக்கு வந்துள்ளதோடு மத்திய கிழக்கில் பதட்டத்தை ஏற்படுத்தி வந்த 13 ஆண்டுகால உள்நாட்டுப் பேருக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளது.

இந்த பிராந்தியத்தின்  மையப்பகுதியில் அமைந்துள்ள சிரியாவுக்கு  ஆதரவு அளித்து வந்த மற்றும் நெருக்கடியான காலக்கட்டங்களில் ஆசாட்டுக்கு பக்கபலமாக இருந்து  வந்த ரஷ்யா மற்றும் ஈரானுக்கு  இஸ்லாமிய கிளர்ச்சியாளர்களின் இந்த வெற்றி பலத்த அடியைக்  கொடுத்துள்ளது.

இராணுவக் குவிப்புக்கான எந்த அறிகுறியும் இல்லாத நிலையில் தலைநகருக்குள்  தாஙகள் நுழைந்ததாக கிளர்ச்சியாளர்கள் கூறினார். மத்திய சதுக்கத்திற்கு வாகனங்களிலும்  கால்நடையாகவும் வந்த பொது மக்கள் ஆசாட் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிவுக்கு வந்ததை  குறிக்கும் வகையில் “விடுதலை“ என முழக்கமிட்டனர்.

அல்-ராவ்டா அதிபர் மாளிகைக்குள் பொது மக்கள் நுழைவதையும்  சிலர்  அங்குள்ள தளவாளடங்களுடன் வெளியேறுவதையும் காண முடிந்தது. டமாஸ்கஸ்  புறநகரில் உள்ள சிறைச்சாலையில் இருந்து ஆயிரக்கணக்கான கைதிகள் விடுவிக்கப்பட்டதாக  கிளர்ச்சியாளர்கள் கூறினார்.

சிறையிலிருந்து கைதிகள் விடுவிக்க படுவதையும் அவர்களை பிணைத்திருந்த சங்கிலிகள் அகற்றப்படுவதையும் சிரிய மக்களுக்கு இந்த மகிழ்ச்சியான தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறோம் என்று அவர்கள் குறிப்பிட்டனர்.

டமாஸ்கஸில் உள்ள ஈரானிய அரச தந்திர அலுவலகமும் கிளர்ச்சியாளர்களால் முற்றுகயிடப் பட்டதாக ஈரானிய ஆங்கில செய்தி நிறுவனமான பிரஸ் டிவி கூறியது.ஆசாட் படைகளுக்கு  பல ஆண்டுகளாக ஆதரவளித்து வந்த ஹெஸ்புல்லா படைகள் தலைநகர் டமாஸ்கஸை  கிளர்ச்சிப் படைகள் நெருங்கி வந்த வேளையில் அங்கிருந்து பின்வாங்கின.

அண்மைய செய்திகள்
MidRec
எங்களைப் பற்றி

Media Selangor Sdn Bhd என்பது சிலாங்கூர் மந்திரி பெசார் கழகத்தின் (MBI) துணை நிறுவனம் ஆகும். இது மாநில அரசின் ஊடக ஏஜென்ஸியாக செயல்படுகிறது. Selangorkini மற்றும் SelangorTV ஆகியவற்றுடன் கூட, இந்த நிறுவனம் சீனம், தமிழும் மற்றும் ஆங்கிலத்திலும் இணையதளங்கள் மற்றும் பத்திரிகைகளை வெளியிடுகிறது.